என் அம்மாவுக்கு கோடில எத்தனை சைபர் இருக்கும்னு கூட தெரியாது – வெளிப்படையாக பேசிய ராஜஸ்தான் அணியின் இளம்வீரர்

Sakariya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று தற்போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ள 14வது ஐபிஎல் சீசனில் பல இந்திய இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பெரும்பாலானோர் கவனத்தை ஈர்த்துள்ளனர். அதன்படி இந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி விளையாடிய ஏழு போட்டியிலேயே அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தவர்களில் முக்கிய வீரராக ராஜஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சேத்தன் சக்காரியா திகழ்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமாகி முன்னணி வீரர்களுக்கு எதிரே தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.

sakariya

- Advertisement -

மேலும் ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனிடமும் இவர் தனது சிறப்பான பந்துவீச்சு காரணமாக பாராட்டையும் பெற்றார். தற்போது ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால் வீரர்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். அதேபோல் சக்காரியாவும் தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் ஊர் திரும்பிய அவரிடம் எடுக்கப்பட்ட பேட்டியில் சக்காரியா பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் தான் ஐபிஎல் தொடரில் பெற்ற சம்பளம் குறித்த பல்வேறு விடயங்களை பேசியுள்ளார் மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது தந்தை குறித்தும் அவரது சிகிச்சை குறித்தும் வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் எனக்கு ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் இருந்து கிடைக்கப்பெறும் சம்பளத்திலிருந்து ஒரு தொகை எனது வங்கிக் கணக்கிற்கு வந்தது. அந்த தொகையை நான் உடனடியாக எனது குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்தேன். அந்த பணத்தினால் தான் தற்போது என் தந்தைக்கு தேவையான மருத்துவ உதவியை நாங்கள் செய்து வருகிறோம். எனது குடும்பத்திற்கு பணம் தேவையாக இருந்தது.

sakariya 2

பலரும் ஐபிஎல் தொடரை நிறுத்துங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என் குடும்பம் என் வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கிறது. நாங்கள் மிகவும் ஏழை. கிரிக்கெட்டால் கிடைக்கும் இந்த ஊதியம் மட்டும் தான் எனது வாழ்வாதாரம் என்று சக்காரியா கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஐபிஎல் தொடரில் கிடைத்த பணம் மூலமாகத்தான் தற்போது தந்தைக்கு சிகிச்சை கொடுக்க முடிந்தது. இந்த ஐபிஎல் தொடர் மட்டும் நடைபெறாமல் போயிருந்தால் எங்களுடைய நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும்.

sakariya

என்னுடைய சமுதாயத்தில் நான் தான் இப்போது அதிகமாக சம்பாதித்து இருக்கிறேன். என்னுடைய தாய்க்கு கோடிகளில் எத்தனை சைபர் இருக்கிறது என்பது கூட தெரியாது. முதலில் எனது தந்தை சரியாக உடல்நலம் தேறி வீட்டிற்கு வர வேண்டும். அதன்பிறகு பாதியில் நிற்கும் எங்கள் வீட்டை நான் கட்டி முடிக்க வேண்டும் எனவும் வெளிப்படையாக சக்காரியா பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement