மொயின் அலியின் சிறப்பான ஆட்டத்தால் இனி இவருக்கு சென்னை அணியில் வாய்ப்பே கிடைக்காதாம் – விவரம் இதோ

CSK-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று சென்னை அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே நடந்தது. நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி வெளிநாட்டு வீரர்களில் டுப்லஸ்ஸிஸ், சாம் கரன், டுவெய்ன் பிராவோ மற்றும் மொயின் அலியை தேர்வு செய்தார். இம்ரான் தாகிர்க்கு பதிலாக மொயின் அலியை தேர்வு செய்தது நேற்று வீண் போகவில்லை. நேற்று சென்னை அணியின் தொடக்க ஆட்டக்கார வீரர்களாக டுப்லஸ்ஸிஸ் மற்றும் ருத்துராஜ் களமிறங்கினார்.

- Advertisement -

ஆனால் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தினர். அதிலும் குறிப்பாக டு பிளசிஸ் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். முதல் 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து சென்னையில் மிக இக்கட்டான நிலையில் தவித்து வந்த பொழுது, மகேந்திர சிங் தோனி அலியை 3-வது வீரராக களம் இறக்கினார்.

சுரேஷ் ரெய்னாவுடன் ஜோடி போட்டு ஆட ஆரம்பித்த மொயின் அலி 24 பந்துகளில் 36 ரன்கள் அடித்து மிகப்பெரிய அளவில் அசத்தினார். நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என அதிரடியாக ஆடி சென்னை அணியின் நெருக்கடியை குறைத்தார். நேற்று மகேந்திர சிங் தோனி மொயின் அலியை தேர்வு செய்தது வீண் போகவில்லை என்று ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் கருத்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

Moeen ali

இனி வரும் போட்டிகளில் மொயின் அலி தான் விளையாடுவார் என தெரிகிறது. ஏனெனில், மொயின் அலி ஒரு ஆல்ரவுண்டர் வீரர். ஆனால் இம்ரான் தாகிர் வெறும் பந்து மட்டுமே வீசுவார். எனவே இனி சென்னை அணி அதனுடைய வெற்றியை தீர்மானிக்கும் பட்சத்தில், ஆல்ரவுண்டர் மொயின் அலியை தான் விளையாட வைக்கும் என்று தெரிகிறது.

Moeen ali 1

வெறும் பந்து வீச்சுக்கு மட்டும் இம்ரான் தாஹிரை மகேந்திர சிங் தோனி பயன்படுத்த மாட்டார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறும் பட்சத்தில் இனி இம்ரான் தாஹிருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது.

Advertisement