காயமடைந்த ரோஹித் சர்மாவின் இடத்திற்கு போட்டியிடும் 2 வீரர்கள் – வாய்ப்பு யாருக்கு ?

Dhawan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னர் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

rohith1

- Advertisement -

இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியின்போது முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரரான ரோகித் சர்மா இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் வீசிய அதிவேகப் பந்து வீச்சில் வலது முழங்கையில் காயமடைந்தார். இதன் காரணமாக வலியில் துடித்த ரோஹித் முதல் உதவி பெற்று அந்தப் போட்டியில் விளையாடினார். இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸின் போது பீல்டிங் செய்ய அவர் மைதானத்திற்கு வரவில்லை.

இதனால் இரண்டாவது போட்டியின் போது அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அவர் அணியில் இணைவது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரோகித் சர்மாவின் துவக்க வீரருக்கான இடத்தில் யார் விளையாட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மாவின் துவக்க வீரருக்கான இடத்தில் இரண்டு வீரர்கள் போட்டியில் உள்ளனர்.

gill

அதில் ஒன்று சுப்மன் கில் சமீபகாலமாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக களமிறங்கி வரும் அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவரை ஒருநாள் தொடரிலும் துவக்க வீரராக களமிறக்கலாம் என்ற ஒரு யோசனை இந்திய அணி நிர்வாகத்திடம் உள்ளது. அதேபோன்று இரண்டாவதாக ஐந்தாவது இடத்தில் விளையாடி வரும் கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் அவருக்கு மிகவும் பிடித்த இடமாக துவக்க வீரர் இடம் இருப்பதனால் அவர் துவக்க வீரராக களம் இறங்குவார் என்றும் கூறப்படுகிறது.

Rahul

அப்படி ராகுல் தொடக்க வீரராக களமிறங்கும் பட்சத்தில் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய 2 பேரும் வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்பதால் கேஎல் ராகுல் ரோஹித் சர்மாவின் துவக்க வீரர் இடத்தில் ஷிகர் தவானுடன் இறங்குவார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை 26 ஆம் தேதி புனே மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement