மீதியுள்ள போட்டிகளை ஜெயிக்கணுனா இந்திய அணி இதை செய்தே ஆக வேண்டும் – வி.வி.எஸ் லஷ்மனன் ஆலோசனை

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகளிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெறும் என்ற அளவிற்கு இங்கிலாந்து அணியின் பலம் தற்போது அதிகரித்துள்ளது.

eng

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்த வேண்டும் என்றால் இந்த சில முக்கிய விடயங்களை இந்திய அணி வரும் போட்டிகளில் சரி செய்தே ஆக வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி. எஸ் லட்சுமணன் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த தொடரை வெல்ல விரும்பினால் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்தாக வேண்டும். அதனை செய்ய தவறினால் நிச்சயம் இங்கிலாந்து அணி மீது பிரஷர் போடுவது இயலாத காரியமாகும். ரோஹித் அணியில் இல்லாதது ஒரு மிகப்பெரிய தவறான செயல் என்றும் லட்சுமணன் குறிப்பிட்டுள்ளார்.

archer 1

தவான் மற்றும் ராகுல் அனுபவம் அணிக்கு தேவை என்பது புரிகிறது. இருந்தாலும் சரியான கலவையில் வீரர்களை கொண்டு வர வேண்டும். டெஸ்ட் தொடரும் டி20 தொடரும் வேறு வேறு இந்த தொடரை பொறுத்தவரை இங்கிலாந்து அணிக்கு அனுபவம் அதிகம் மேலும் டி20 தொடரில் அவர்கள் நம்பர் ஒன் அணி என்பதால் அவர்களை வீழ்த்த முயற்சி அதிகமாக செய்ய வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

archer

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை 14 ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement