ஒரே ஆளாக மானம் காத்த இளம் வீரர். இருந்தாலும் இந்திய அணியின் தோல்வி உறுதி – விவரம் இதோ

Iyer
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி தற்போது அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி இங்கிலாந்து அணி வீரர்களின் சிறப்பான பவுலிங்கால் ரன்கள் குவிக்க முடியாமல் திணறி கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே குவித்தது.

indvseng

- Advertisement -

அதிலும் குறிப்பாக முதல் நான்கு வீரர்களாக களமிறங்கிய தவான் 4 ரன்களிலும், ராகுல் ஒரு ரன்னிலும், கோலி ரன் எதுவும் எடுக்காமலும், ரிஷப் பண்ட் 21 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கட்டத்தில் இந்த 4 விக்கெட்டுகளும் விழுந்த பிறகு ரன்களே வராது என்று எதிர்பார்த்த நிலையில் ஒருபுறம் ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் இறுதிவரை போராடி 48 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்டிக் பண்டியா 21 பந்துகளைச் சந்தித்த நிலையில் 19 ரன்கள் குவித்து அதிர்ச்சியளித்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் முடிவில் 124 ரன்களை மட்டுமே குவிக்க தற்போது 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் புதிய வீரர்களாக அணியில் கலந்து இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இஷன் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

shreyas

மேலும் அடுத்த போட்டியிலும் இவர்கள் இருப்பது சந்தேகமா உள்ளது. ஏனெனில் இவர்கள் இருவரில் ஒருவர் விளையாடினாலும் அவருக்கு பதிலாக ஐயரே வெளியேற வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் வேளையில் தற்போது தனி ஒரு ஆளாக ஐயர் சிறப்பாக விளையாடி 48 பந்துகளில் 6கி 7 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

iyer 1

இதன் காரணமாக அடுத்த போட்டியிலும் அவர் விளையாடுவது உறுதியாகி உள்ளது. மேலும் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வரும் இங்கிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 81 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement