ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நான் இந்த இடத்தில் களமிறங்கி விளையாடவே ஆசைப்படுகிறேன் – ரோஹித் விருப்பம்

- Advertisement -

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி வரும் டிசம்பர் 17ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. 17ஆம் தேதி துவங்கும் அந்த முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்க இருக்கிற. இந்த போட்டியோடு விராட் கோலி இந்தியா திரும்பிவிடுவார். மேலும் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பெறாத ரோஹித் இந்த போட்டியில் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

Rohith

- Advertisement -

தனது மனைவிக்கு குழந்தை பிறப்பு காரணத்தினால் முதல் போட்டியோடு கோலி இந்தியா திரும்பி விடுவார் அதே சமயத்தில் மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெஸ்ட் தொடர்களில் மட்டும் அங்கம் வகித்துள்ள ரோகித் சர்மா ஐபிஎல் தொடர் முடிந்து இந்தியா திரும்பி தற்போது பெங்களூரு தேசிய அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார்.

மேலும் இன்னும் ஓரிரு வாரங்கள் கழித்து ஆஸ்திரேலியா சென்று அணியுடன் இணைவார் என்று கூறப்படுகிறது. அவர் காயத்திலிருந்து முழு அளவில் விடுபடுவதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார். பிசிசிஐயின் மருத்துவக் குழுவும் ரோஹித்தின் உடல்நிலை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் தான் எந்த இடத்தில் விளையாட வேண்டும் என்பது குறித்து ரோஹித் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது : டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக விளையாடுவதே எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாகும். ஆனாலும் நான் எந்த இடத்தில் விளையாடவேண்டும் என அணி நிர்வாகம் முடிவு செய்திருப்பார்கள். அதனால் அணி நிர்வாகம் என்ன என்னிடமிருந்து எதிர்பார்க்கிறதோ அதற்கேற்றார் போல் நான் என்னை மாற்றிக் கொள்வேன்.

Rohith

மேலும் யார் எந்த இடத்தில் விளையாட வேண்டும் என அணி நிர்வாகத்திற்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். இதனால் அவர்கள் எங்கு என்ன பேட்டிங் செய்ய விரும்புகின்றார்களோ அங்கு நான் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன் என ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement