இனிமே எந்த தப்பும் நடக்காது. ப்ளீஸ் என்னை சேத்துக்கோங்க. கங்குலிக்கு மன்னிப்பு கடிதம் எழுதிய மஞ்சரேக்கர் – விவரம் இதோ

Sanjay
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருக்கிறது. இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்களும், நடுவர்களும், வர்ணனையாளர்கள் உற்சாகமாக இதற்காக தயாராகி வருகின்றனர். ஆனால் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்ட சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு இதில் இடமில்லை.

ipl

- Advertisement -

கடந்த ஆண்டு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பல சர்ச்சைகளில் சிக்கினார். வாய்க்கு வந்தபடி பேசி கொண்டிருந்தார். இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை ‘துண்டு துக்கடா வீரர்’ என்று விமர்சனம் செய்தார். அவரை அணியில் எடுக்கவே மாட்டேன் என்றும் கூறினார்.

மேலும் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே உடன் கடுமையான வாக்குவாதம் செய்து அவரை இழித்துறைத்து பேசினார். நீங்கள்தான் கிரிக்கெட் ஆட வில்லையே அப்புறம் ஏன் பேசுகிறீர்கள் என்றெல்லாம் கேட்டார்.

Sanjay

அதனை தாண்டி கடந்த பல வருடங்களாக ஒருதலைபட்சமாக வர்ணனை செய்து வருகிறார். ஐபிஎல் தொடரில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட அணிக்கு மட்டுமே சாதகமாக பேசுவார். இதனை வைத்து பிசிசிஐ தடை செய்தது.

- Advertisement -

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய வீரர்கள் நடுவர்கள் அடங்கிய குழு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கிறது. இதன் காரணமாக மீண்டும் தன்னை வர்ணனையாளர் குழுவில் சேர்த்துக் கொள்ளுமாறு பிசிசிஐக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

Sanjay

மேலும் நான் விதிப்படி நடந்து கொள்வேன் என்னை மீண்டும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் சஞ்சய் மஞ்ரேக்கர். இதுகுறித்து இறுதி முடிவை சௌரவ் கங்குலி எடுப்பார் என்று தெரிகிறது.

Advertisement