தற்போதைய உலகின் மிகச்சிறந்த பீல்டர் இவர்தான். அது கோலியும் இல்லை, ஜடேஜாவும் இல்லை – ஜான்டி ரோட்ஸ் கணிப்பு

Rhodes
- Advertisement -

கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டையும் தவிர பீல்டிங்காலும் வெற்றி பெற முடியும் என்று உலகிற்கு காட்டியவர் தென்ஆப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ். மின்னல் வேகமாக பந்தை எடுத்து, அதிவேகமாக ஸ்டம்பை அடித்து ரன் அவுட் செய்வதில் வல்லவர்கள். வளைந்து பிடிப்பதில் கில்லாடி.

rhodes 2

- Advertisement -

இப்படிப்பட்ட ஜாண்டி ரோட்ஸ் தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பீல்டிங் பயிற்சியாளராக இருக்கிறார். இவர் சமீபகாலமாக தனக்கு பிடித்த சிறந்த பீல்டர்கள் பற்றி பேசி வருகிறார். கடந்த காலங்களில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் மிகச்சிறந்த பீல்டர்கள் என்று தெரிவித்திருந்தார். அதிலும் சுரேஷ் ரெய்னா கீழே விழாமல் ரன்களை சேர்ப்பதில் வல்லவர் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இவர்தான் தற்போதைய மிகச் சிறந்த பீல்டர் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமீபத்தில் இன்ஸ்டாகிராம் நேரலையில் சக வீரருடன் அவர் கூறியதாவது…கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த பீல்டர் என்று எடுத்துக் கொண்டால் அது ஏபி டிவிலியர்ஸ்தான். அவரால் பேட்டிங் பிடிக்க முடியும் ,பந்து வீச முடியும், விக்கெட் கீப்பிங் செய்வார், ஸ்லிப் திசையில் நிற்பார், மிட் ஆஃபில் பீல்டிங் செய்வார் மிட் ஆணில் பில்டிங் செய்வார்.

abd1

ஸ்கொயர் லெக் திசையில் பீல்டிங் செய்வார். உண்மையில் சொல்லப்போனால் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஃபில்டர் ஏபி டிவில்லியர்ஸ் தான் .நான் பார்த்தவரையில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் அனைத்து இடங்களிலும் பில்டிங் செய்வதில் வல்லவர். அதேநேரத்தில் ஏபி டிவிலியர்ஸ் அவரையும் தாண்டி பட்டையை கிளப்பி வருகிறார். சுரேஷ் ரெய்னாவும் நன்றாக பில்டிங் செய்வார்.

ஆனால் என்னை பொறுத்த வரையில் மிகச்சிறந்த பில்டர் என்றால் அது ஏபி டிவிலியர்ஸ் தான் என்று கூறியுள்ளார் ஜான்டி ரோட்ஸ். ஜான்டி ரோட்ஸின் இந்த கருத்திற்கு பலரும் தங்களது கருத்துக்களை பதிலாக முன்வைத்து வருகின்றனர். மேலும் அவரது இந்த பதிவிற்கு கமெண்டுகளும் அதிகளவு குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement