இந்திய அணிக்காக இவர் விளையாடாமல் போனது இந்திய அணிக்கு ஏற்பட்ட நஷ்டம். எனக்கு அவரை நெனச்சா வருத்தமா இருக்கு – ரவி சாஸ்திரி வேதனை

Ravi
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ரவிசாஸ்திரி செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் இந்திய அணி முக்கிய கோப்பைகளை வெல்லவில்லை என்றாலும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறது. இருப்பினும் அவரது தனிப்பட்ட செயல்பாடு காரணமாக ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

Shastri

- Advertisement -

ஆனால் அதை எல்லாம் கவலைப்படாமல் இந்திய அணியை முன்னேற்றுவது வேலையாகக் கொண்டு அனைத்து வகையிலும் இந்திய அணியை மெருகேற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது ஓய்வு நேரத்தில் இருக்கும் ரவிசாஸ்திரி மும்பை அணிக்காக பல ஆண்டுகளாக ரஞ்சி கோப்பைகளில் விளையாடி இந்திய சர்வதேச அணியில் ஒரு டெஸ்ட் போட்டிகளில் கூட விளையாட முடியாமல் போன ஒரு வீரர் குறித்து தனது வருத்தினை அளித்துள்ளார்.

அதன்படி மும்பை அணிக்காக விளையாடியவர் அமோல் முசும்தார் தொடர்ந்து 20 ஆண்டுகளாக வெறும் முதல்தர போட்டிகளில் மட்டும் விளையாடி ஓய்வினை அறிவித்தவராவார். இவரை தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்த ரவிசாஸ்திரி ரஞ்சி கோப்பை போட்டியின்போது அமோல் முசும்தாருடன் எடுத்த புகைப்படம் ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

“அது என்னுடைய கடைசி சீசன் அவருடைய முதல் சீசன்” அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் போனது இந்திய கிரிக்கெட்டிற்கு ஏற்பட்ட நஷ்டம் என நினைக்கிறேன் என்று ரவி சாஸ்திரி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதனை கண்ட அமோல் முசும்தார் சிறிய வயதிலிருந்து ரவி சாஸ்திரி தான் எனது ஹீரோ.

- Advertisement -

1993-94 மும்பை அணி ரஞ்சிக் கோப்பையை வென்றபோது என் தோள் மீது கையை போட்டு நன்றாக விளையாடினால் எனப் பாராட்டினார். இந்த நாளை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது கேப்டனுக்கு நன்றி என்று தனது பதிலை அளித்துள்ளார். அமோல் முசும்தார் 1993 94 முதற்கட்ட போட்டிகளில் மும்பை அணிக்காக அறிமுகமாகி 2013 வரை சுமார் 177 போட்டிகளில் விளையாடி 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.

அதில் 30 சதங்களும் 60 அரை சதங்களும் அடங்கும் 2014 ஆம் ஆண்டு இறுதியாக தனது ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைப்போன்றே பல திறமையான வீரர்கள் வெறும் முதல்தர போட்டியோடு தங்களது கிரிக்கெட் கேரியரை முடித்துள்ளதையும் நாம் கண்டுள்ளோம். ரவி சாஸ்திரியின் இந்த பதிவிற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement