அரசாங்கம் விரும்பினால் அப்படியே தூக்கி தர தயாராக இருக்கிறோம் – பெரிய மனசுதான் கங்குலிக்கு நல்ல ஐடியா

Ganguly
- Advertisement -

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சீனாவைவிட இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வைரசிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளது.

Corona-1

- Advertisement -

தற்போது வரை இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 600ஐ தாண்டி உள்ளது. மேலும் 13 பேர் இறந்துள்ளனர் இன்னும் சில வாரங்களில் இந்த வைரஸின் தாக்கம் பல ஆயிரத்திற்கு சென்று விடும். அப்போது அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க தற்போது உள்ள மருத்துவ வசதிகளும், கட்டிடங்களிலும் பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிகிறது.

ஏனெனில் சிகிச்சைக்கு வரும் ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி தனி அறையில் வைத்தே பார்க்க வேண்டியிருக்கிறது. மேற்கு வங்கத்திலும் இதேபோல் கரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒருவேளை சிகிச்சை அளிக்க இடம் பற்றாக்குறை ஏற்பட்டால் ஈடன் கார்டன் மைதானத்தின் அறைகளை வழங்க தயாராக உள்ளோம் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்குலி கூறியதாவது : அரசு எங்களிடம் கேட்டால் நாங்கள் கொடுப்பதற்கு எப்போதும் தயாராக உள்ளோம். இந்த நேரத்தில் எங்கும் என்ன தேவை என்றாலும் அதை செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார் சௌரவ் கங்குலி. சௌரவ் கங்குலி தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கிறார். இதற்கு முன்னர் கடந்த சில வருடங்கள் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கொல்கத்தா மைதானத்தில் வீரர்கள் தங்குவதற்கு தனியே புதிதாக பல அறைகள் கட்டி இருக்கிறோம். அந்த அறைகள் முழுவதையும் அரசு கேட்குமாயின் அதனை மருத்துவ உதவிகளுக்காக பயன்படுத்தி கொள்ள நாங்கள் அந்த அறைகளை வழங்க தயாராக இருக்கிறோம் என்று கங்குலி தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.

Ganguly

ஏற்கனவே இதேபோன்ற அறிவிப்பினை பாண்டிச்சேரி கிரிக்கெட் வாரியமும் அறிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து கங்குலியும் தற்போது இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இருப்பினும் இந்த வைரஸ் தாக்கம் எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தெரியவில்லை.

Advertisement