4 நாளில் இந்தியா இப்படி பட்ட நிலைக்கு வரும்னு நான் நினைக்கலை – கிண்டலாக பேசிய நியூசி பயிற்சியாளர்

Mcmillan
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. படுதோல்வியை சந்தித்த இந்திய அணி அதிக அளவு விமர்சனங்களை தற்போது எதிர்கொண்டு வருகிறது.

Ind-lose

- Advertisement -

அதிலும் குறிப்பாக பேட்டிங் குறித்த விமர்சனங்கள் அதிக அளவில் எழுந்து வருகின்றன இந்திய அணி முதல் இன்னிங்சில் 165 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 191 ரன்கள் மட்டுமே அடித்தது அத்துடன் 4 வது நாள் முதல் செஷனுடன் ஆட்டம் முடிவுக்கு வந்ததால் உலகின் நம்பர் ஒன் அணியான இந்திய அணி இப்படி நான்கு நாட்களுக்குள் சரண் அடையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இதே கருத்தினை தான் நியூசிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மற்றும் பயிற்சியாளர் ஆன கிரேக் மேக்மில்லன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி விளையாடிய விதத்தை பார்க்கும் போது நியூசிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களை சரி செய்து கொள்ளவில்லை அவர்கள் இந்தியாவில் எப்படி பேட்டிங் செய்தார்களோ அதே போன்று பேட்டிங் செய்தார்கள் இந்தியாவில் முட்டிக்கு மேலே ஆடும் சில ஷாட்களை ஈசியாக ஆட முடியும்.

Southee 2

ஆனால் நியூசிலாந்து நாட்டில் அப்படி விளையாட முடியாது. அனுபவ வீரர்களான டிரென்ட் போல்ட் மற்றும் சவுதி பந்துவீச்சில் இந்திய வீரர்கள் திணறுவதை பார்க்க முடிந்தது. இதுபோன்ற மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் ஆடும்போது அவர்கள் இருவரும் சிறப்பான பந்து வீச்சாளர்களாக திகழ்கிறார்கள். இந்திய அணி 4 நாளில் சரணடையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று மெக்மில்லன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement