இந்திய அணியின் இவரது விக்கெட்டை கைப்பற்ற இரண்டு வாரம் பயிற்சி எடுத்தேன் – நியூசி பவுலர் ஆவேசம்

Kohli
- Advertisement -

நியூசிலாந்திற்கு புதிதாக அறிமுகமான 7 அடி உயர பந்து வீச்சாளர் கைல் ஜாமிஷன் இந்தியாவின் நடுவரிசை வீரர்களை முதல் டெஸ்ட் போட்டியில் காலி செய்தார். செட்டேஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஹனுமா விஹாரி என அனைவரும் அவர் பந்தில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

Jamieson

- Advertisement -

குறிப்பாக அவர் விராட் கோலி மற்றும் புஜாராவை அவுட் செய்த விதம் அற்புதமாக இருந்தது. விராட் கோலிக்கு அவர் வீசிய 7 பந்துகளில் 6 பந்துகளில் சற்று ஷார்ட் ஆஃ லெந்தில் வீசினார். பின்னர் சிறிது இடைவெளிவிட்டு ஐந்தாவது ஸ்டம்பில் கவர் டிரைவ் ஆடுவதுபோல் வீசினார் ஜமிசன் .

இதனை பாத்த விராட் கோலி தனக்கே உரிய பந்து வந்து விட்டது என நீட்டி ஒரு டிரைவ் அடித்தார். அது எட்ஜ் ஆகி டெய்லரிடம் சென்றது.புஜாராவிற்குஒரு பந்தை உள்ளே விட்டு மற்றொரு பந்தை வெளியே எடுத்தார். இது அவருக்கே தெரியாமல் மட்டையின் விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது.

kohli 1

இவை குறித்து பேசிய ஜாமிஷன் கூறுகையில் : கடந்த இரண்டு வாரங்களாக விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க பயிற்சி செய்து வந்தேன். ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி இருந்தது . அதனை நான் பயன்படுத்திக்கொண்டேன். கோலி மிகப்பெரிய வீரர் . உலகில் அனைத்து இடங்களிலும் ரன் குவிக்கிறார் . அவரது சிறு தவறை வைத்து ஊதி பெரிதாக்க பெரிதாக்க கூடாது . அவரது விக்கெட்டை எடுக்க இரண்டு வாரகாலம் எளிதாக பயிற்சி செய்தேன். அதே நேரத்தில் கொஞ்சம் காற்று அடித்தது அதுவும் எனகி அதிர்ஷ்டமகா இருந்தது என்று பேசினார் கையில் ஜாமிஷன்

Advertisement