4 வருடம் கழித்து இந்திய அணியில் நடந்த சம்பவம் : இனி இவர் தான் இந்த இடத்திற்குப் பொருத்தமானவர் – விவரம் இதோ

Iyer-3
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று நியூசிலாந்து கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி ஸ்ரேயஸ் மற்றும் கே. ராகுல் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 50 ஓவர் முடிவில் 347 ரன்களை குவித்தது.

iyer

- Advertisement -

இதன்பின்னர் 348 என்ற இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி அற்புதமாக ஆடி 49வது ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்து வெற்றி பெற்றது. இதே போட்டியில் அபாரமாக ஆடிய ராஸ் டெய்லர் சதம் அடித்து அசத்தினார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் நான்காவது இடத்தில் ஆடும் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் அபாரமாக ஆடி சதம் விளாசினார். இது அவரது முதல் ஒருநாள் போட்டி சதம் ஆகும். இந்த சதத்தின் மூலம் பல ஆண்டுகளாக நிலவி வந்த நான்காம் இடத்திற்கான தேடல் முடிவடைந்துள்ளது என்றே கூறலாம்.

2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டித்தொடரில் மணிஷ் பாண்டே நான்காம் இடத்தில் களம் இறங்கி 80 பந்துகளில் சதமடித்தார். அதற்குப் பின்னர் சுரேஷ் ரய்னா, அம்பட்டி ராயுடு, மணிஷ் பாண்டே, ராகுல் என பல வீரர்களை வைத்து அந்த இடத்தில் பரிசோதனை செய்யப்பட்டதில் யாரும் பெரிதாக ஜொலிக்கவில்லை. தற்போது அந்த இடத்தை நிரந்தரமாக தக்க வைக்கும் விதமாக நான்காண்டுகள் கழித்து சதம் விளாசியுள்ளார் ஸ்ரேயாஸ் அய்யர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement