ராயுடு உலககோப்பையில் தேர்வு செய்யப்படாததன் பின்னணி இதுதான் – ரகசியத்தை உடைத்த தேர்வுக்குழு தலைவர்

- Advertisement -

இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரில் செமி பைனல் போட்டியுடன் வெளியே வந்தது. அணி பல விதங்களிலும் முன்னேற்றம் கண்டிருந்தாலும் அணியின் தோல்விக்கு குறிப்பாக 4ஆம் இடத்தில் ஆடும் பேட்ஸ்மேன் சரியாக இல்லாததும் காரணமாக அமைந்தது.

Rayudu

- Advertisement -

அந்த இடத்திற்கு உலக கோப்பை தொடருக்கு முன்னர் ஷ்ரேயாஸ் ஐயர், ராயுடு, மனீஷ் பாண்டே, ரஹானே, ரெய்னா என அந்த இடத்தில் பலரும் பரிசோதிக்கப்பட்டனர். இதில் ராயுடு வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் நியூசிலாந்து தொடரின்போது அற்புதமாக ஆடி சில சதங்களை விளாசினார். இதன் காரணமாக அவர் கண்டிப்பாக 4ஆம் இடத்தில் அமர்த்தப்படுவார் என்று அனைவரும் நினைத்தனர். அணி நிர்வாகமும் இதனை வைத்துதான் களமிறங்கியது.

ஆனால் உலக கோப்பை அணி அறிவிக்கப்பட்ட போது அதில் ராயுடுவிற்கு இடமில்லை. இந்நிலையில் உலககோப்பை தேர்வுக்குழு தலைவராக இருந்த எம்எஸ்கே பிரசாத் தற்போது இது குறித்து மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது :

rayudu

உலகக்கோப்பைக்கு கடைசி நேரத்தில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் அசத்தினார். அம்பத்தி ராயுடுவிற்குப் பதில் விஜய் சங்கர் இருந்தால் நமக்கு பல அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எண்ணினோம். இதன் காரணமாக அவருக்கு பதிலாக விஜய் ஷங்கரை எடுத்தோம்.

Shankar 1

இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே அம்பட்டி ராயுடுவிற்கு இடம் கிடைக்கவில்லை என்று கூறினார் எம்எஸ்கே. பிரசாத். தேர்வுக்குழு தலைவராக உள்ள எம்எஸ்கே பிரசாரத்தின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்த மாத இறுதி முதல் புதிய தேர்வுக்குழு தேர்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement