தோனியை மட்டுமல்ல ரெய்னாவையும் தாண்டவுள்ள ரோஹித் சர்மா – விவரம் இதோ

Rohith-1
- Advertisement -

இந்தியா இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் பங்கேற்றதன் மூலம் ரோகித் சர்மா தோனியின் மிகப்பெரிய சாதனையான அதிக டி30 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்ற வீரர் என்ற சாதனையை 99 போட்டிகளுடன் ரோஹித் முறியடித்தார்.

Rohith

- Advertisement -

இதனை தொடர்ந்து தற்போது டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் பட்டியலிலும் சின்ன தல ரெய்னாவை முந்த இருக்கிறார் ரோஹித். அதன்படி தற்போது டி20 போட்டிகளில் இந்திய வீரர் சார்பாக அதிக ரன்கள் அடித்தவர்கள் அனைத்துப் போட்டிகளிலும் சேர்த்து விராட்கோலி 257 இன்னிங்ஸ்களில் 8556 ரன்களை அடித்துள்ளார்.

அதற்கடுத்து சுரேஷ் ரெய்னா 303 இன்னிங்ஸ்களில் 8392 ரன்களை அடித்துள்ளார். இதற்கடுத்து ரோகித் சர்மா தற்போது 306 இன்னிங்ஸ்களில் 8321 ரன்களுடன் உள்ளார். இந்நிலையில் தற்போது நாளை நடைபெற உள்ள பங்களாதேஷ் போட்டியில் ரோகித் சர்மா 72 ரன்கள் அடித்தால் ரெய்னாவின் சாதனையை முறியடிக்க முடியும். ஒருவேளை நாளை போட்டியில் ரோகித் சர்மா இதனை நிகழ்த்தினால் கோலிக்கு அடுத்து அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைப்பார்.

Raina

அப்படி இல்லையெனில் மீதியுள்ள 2 போட்டியில் அவர் அடித்தாலும் கண்டிப்பாக சாதனைப் பட்டியலில் இணைய இருப்பது உறுதி. மேலும் ரெய்னா மற்றும் டோனி ஆகியோர் இதன் பிறகு ஐபிஎல் போட்டியில் மட்டுமே விளையாடுவார்கள் என்பதால் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் டி20 போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை.

Advertisement