என்ன நடக்கிறது என்பது தெரியாது. நான் இதை செய்யப்போகிறேன் – கங்குலி அதிரடி

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யின் புதிய தலைவராக இன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அதிகாரபூர்வமாக பதவியேற்றார். இவர் பிசிசிஐயின் 39 தலைவராக இன்று பதவி ஏற்றார்.

Ganguly

- Advertisement -

அத்துடன் பிசிசிஐ தலைமைப் பொறுப்பை ஏற்ற இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் கங்குலி இன்று பெற்றார். இந்நிலையில் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற சவுரவ் கங்குலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : நாங்கள் கிரிக்கெட் தொடர்பான அனைத்து விஷயங்களையும் இனிமேல் கவனிப்போம்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வாரியத்தில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது அதனை நான் ஆலோசிக்கவும் மாட்டேன். இனிமேல் எங்களின் முழு பங்களிப்பும் இந்திய கிரிக்கெட் அணியை முன்னேற்ற மட்டுமே குறியாக இருப்போம். இந்திய அணியின் கேப்டன் கோலியிடம் பேச உள்ளேன்.

Ganguly

கேப்டன் என்பதால் இந்திய அணி குறித்து விவாதித்து அவரிடம் அணி முன்னேற்றம் குறித்து பேசுவது நல்லது என்றும் அணியை அடுத்த தரத்திற்கு உயர்த்த அவரே சரியான வீரர் என்றும் நாங்கள் யோசித்து இதனை செய்ய உள்ளேன். நான் பதவியில் இருக்கும் வரை அனைத்து வீரர்களும் சமமாக பார்க்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கான தேவைகள் நிறைவேற்றப்படும் என்று கங்குலி கூறியிருக்கிறார்.

Advertisement