இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவது போல உலகெங்கிலும் டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சொந்தமான எம்.ஐ நியூயார்க் அணியும் பங்கேற்று விளையாடி வருகிறது. அப்படி நடைபெற்று வரும் இந்த தொடரில் இன்றைய ஆட்டத்தில் வாஷிங்டன் பிரீடம் மற்றும் எம்.ஐ நியூயார்க் ஆகிய அணிகள் மோதின.
கிரிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த கைரன் பொல்லார்டு :
அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற எம்.ஐ நியூயார்க் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய எம்.ஐ நியூயார்க் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்தது.
இதன் காரணமாக 30 ரன்கள் வித்தியாசத்தில் வாஷிங்டன் பிரீடம் அணி வெற்றி பெற்றது. ஆனாலும் இந்த போட்டியில் எம்.ஐ நியூயார்க் அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கைரன் கொல்லார் 56 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 100 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவர் இந்த போட்டியில் அடித்த 100 ரன்கள் மூலம் ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக முதலிடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து முதலிடத்திற்கு வந்துள்ளார். இதுவரை டி20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்களை அடித்த வீரராக கிரிஸ் கெயில் 14,562 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.
இதையும் படிங்க : அஜித் அகார்கரின் சாதனையை சேப்பாக்கம் மைதானத்தில் முறியடித்த பிரசித் கிருஷ்ணா – விவரம் இதோ
இவ்வேளையில் இந்த போட்டியில் அடித்த 100 ரன்கள் மூலம் தற்போது கைரன் பொல்லார்டு 736 டி20 போட்டிகளில் விளையாடி 14,582 ரன்கள் குவித்து டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோன்று உலகளவில் டி20 போட்டிகளில் 700-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையையும் பொல்லார்டு தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



