இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் லக்னோ அணிக்காக 27 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய விலைக்கு வாங்கப்பட்ட அவரது தலைமையின் கீழ் லக்னோ அணி சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர்களது இந்த மோசமான செயல்பாடு நிர்வாகத்தின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
லக்னோ அணியிலிருந்து வெளியேறும் ரிஷப் பண்ட் :
தொடர்ந்து தன்னுடைய தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்த தொடரில் இருந்து வெளியேறியதால் இந்த தொடர் முடிந்த கையோடு லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டும் தானாக முன்வந்து கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து நிச்சயம் அவர் அந்த அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்ற பேச்சு நிலவி வருகிறது.
இவ்வேளையில் 2027 ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக லக்னோ அணியிலிருந்து டிரேடிங் முறையில் ரிஷப் பண்ட் வேறு அணிக்கு செல்ல இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி லக்னோ அணி அவரை 27 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு 2025 மெகா ஏலத்தில் தேர்வு செய்திருந்தது. ஆனால் அவரது மோசமான செயல்பாடு காரணமாக தற்போது அணியிலிருந்து விடுவிக்கவும் முடிவு செய்துள்ளது.
அதோடு அவரும் தனது தொகையை குறைத்து கொண்டு வேறு அணிக்கு செல்ல ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் லக்னோ அணியின் நிர்வாகம் அவரை மீண்டும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு டிரேட் செய்ய முடிவு செய்துள்ளது. ஒருவேளை இந்த டிரேட் உறுதியாகும் பட்சத்தில் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கு செல்வார் என்றும் டெல்லி அணியில் விளையாடி வரும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் லக்னோ அணிக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சச்சினை பார்த்து அந்த விடயத்தை கத்துக்கோங்க.. வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிவுரை குடுத்த – வாசிம் ஜாபர்
இந்த டிரேடிங் குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் இந்த டிரேட் உறுதியானால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 27 கோடிக்கு லக்னோ அணியால் தேர்வு செய்யப்பட்ட ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி அணிக்கு டிரேட் செய்யப்பட்டால் அவரது தொகை 15 கோடியாக குறையும் என்பது உறுதி.



