திலக் வர்மா தலைமையிலான இந்திய ஏ கிரிக்கெட் அணியானது இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று முடிந்த பின்னர் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் சோகத்துடன் வெளியேறிய வைபவ் சூரியவன்சியை இலங்கை வீரர்கள் கிண்டல் செய்தனர். அப்போது சூர்யவன்சி கோபத்துடன் எதிரணி வீரரை தள்ளியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிவுரை வழங்கிய வாசிம் ஜாபர் :
அதிலும் குறிப்பாக போட்டி முடிந்த பின்னர் எதிரணி வீரரின் தோளில் கை வைத்து சூரியவன்சி தள்ளினார். இதனால் களத்தில் இரு அணியில் வீரர்களுக்கும் இடையே வார்த்தை மோதலும் ஏற்பட்டது. அந்த சம்பவம் அப்போதே பெரியளவில் பரபரப்பாக பேசப்பட்ட விடயமாக மாறிய நிலையில் ஐ.சி.சி அவர்களுக்கு தண்டனையும் விதித்திருந்தது. வளர்ந்து வரும் 15 வயதான இளம் வீரரான வைபவ் சூர்யவன்சிக்கு எதிராக இலங்கை வீரர்கள் செய்தது தவறு என்றும் அவரைப் போன்ற வீரர்களுக்கு எதிராக இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று பலரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வேளையில் வைபவ் சூர்யவன்சி களத்தில் எவ்வாறு தனது குணத்தை கையாள வேண்டும்? என்பது குறித்த சில அறிவுரைகளை இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் வழங்கியுள்ளார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் குணத்தை சுட்டிக்காட்டி வைபவ் சூர்யவன்ஷிக்கு சில அறிவுரைகளையும் அவர் வழங்கியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : வைபவ் சூர்யவன்ஷி கண்டிப்பாக இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
தற்போது பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விளையாடி வரும் அவர் ஏற்கனவே நல்ல பெயரையும், புகழையும் பெற்றுள்ளதால் அவருக்கு எதிராக வம்பிழுக்க சிலர் முயற்சிப்பார்கள். அதனால் அவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்த ஒரு செயலிற்கும் உடனடியாக எதிர்வினை ஆற்றக்கூடாது. குறிப்பாக கைகலப்பில் ஈடுபடவே கூடாது. யார் தவறாக பேசியிருந்தாலும் அவர் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நிதானமாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க : இதுமட்டும் நடந்தா உங்க கேப்டன்சி விமர்சனத்துக்கு உள்ளாகும்.. சுப்மன் கில் பத்திரமா இருங்க – கவாஸ்கர் அட்வைஸ்
இளம் வயதில் தனது கிரிக்கெட் கரியரை துவங்கிய போது சச்சின் டெண்டுல்கர் இதேபோன்ற சூழ்நிலைகளை மைதானத்தில் சந்தித்தார். ஆனால் எப்போதுமே அமைதியாகவே இருந்தார் அவரது அந்த குணம் தான் இன்றளவும் அவரை ஜாம்பவானாக வைத்துள்ளது. அந்த வகையில் சச்சின் டெண்டுல்கரை போல அமைதியாக இருக்கும் குணத்தை வைபவ் சூர்யவன்ஷி கற்றுக் கொள்ள வேண்டும் என வாசிம் ஜாஃபர் கூறியது குறிப்பிடத்தக்கது.



