குர்னூர் பிராரிடம் இருக்கும் ப்ளஸ் இதுதான்.. அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கு – வாசிம் ஜாபர் வாழ்த்து

Wasim Jaffer and Gurnoor Brar
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி சார்பாக இரண்டு வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் வேகப்பந்து வீச்சாளரான குர்னூர் பிரார் மற்றும் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்ஷ் துபே ஆகியோருக்கு ஒருநாள் போட்டிகளுக்கான அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் அறிமுகமான இந்த இரண்டு வீரர்களுமே தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

குர்னூர் பிராரை வாழ்த்திய வாசிம் ஜாபர் :

அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளரான குர்னூர் பிரார் 4.5 ஓவர்களில் 27 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 6.5 அடி உயரம் கொண்ட குர்னூர் பிரார் மிகச் சிறப்பான திறமை கொண்டவர் என்றும் அவரது பந்துவீச்சு வலிமையான ஒன்றாகவும் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : குர்னூர் பிராரின் பந்து வீச்சுக்கு அவரது உயரம் மிகப்பெரிய பலத்தை தந்துள்ளது. அவர் மணிக்கு 145 கிலோ மீட்டர் வரை பந்து வீசுவதால் கூடுதல் பவுன்சும் கிடைக்கிறது. அவரிடம் ஒரு வலுவான பந்துவீச்சை முறை உள்ளது. அதன் காரணமாகவே ஜூனியர் கிரிக்கெட்டில் பெரியளவில் அவர் விளையாடவில்லை என்றாலும் இந்திய அணி வரை தற்போது வந்துள்ளார்.

ஏற்கனவே நான் அவரை ஐ.பி.எல் தொடரின் போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் பணியாற்றுகையில் சந்தித்து இருக்கிறேன். அப்போதே அவரது பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. ஐபிஎல் போட்டிகளில் அவருக்கு பெரியளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான அணியில் நிச்சயம் அவர் மிகப்பெரிய வீரராக உருவெடுக்கும் எதிர்காலம் உள்ளது என்று கருதுகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ளி மாபெரும் சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா – விவரம் இதோ

ஏனெனில் அவருடைய பந்துவீச்சில் துல்லியம் இருப்பது மட்டுமின்றி கூடுதல் பவுன்சும் இருக்கிறது. அதோடு அவர் நல்ல வேகத்திலும் பந்து வீசுவதால் நிச்சயம் இனி வரும் காலங்களில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்துவார் என வாசிம் ஜாபர் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement