ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த நட்சத்திர இளம் துவக்க ஆட்டுக்காரரான வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 16 ஆட்டங்களில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதம் என 776 ரன்களை குவித்து நடப்பு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். அதோடு தற்போது 15 வயதே ஆகும் அவர் இந்த தொடரில் 5 விருதுகளையும் வென்று அசத்தியிருந்தார்.
விராட் கோலி வழங்கிய அறிவுரை குறித்து : வைபவ் சூர்யவன்ஷி பேச்சு :
இதன் காரணமாக அவருக்கு வெகுவிரைவில் இந்திய அணியில் இடம் வழங்கப்பட வேண்டும் என்று பலரும் பேசி வந்த வேளையில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய சீனியர் அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக அவர் வெகு விரைவில் இந்திய அணிக்காக அறிமுகமாகப்போவது உறுதி.
இந்நிலையில் இந்த 2026 ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போது அந்த போட்டியில் விளையாடிய ஆர்.சி.பி அணியின் வீரர் விராட் கோலி வெற்றி பெற்றதற்கு பின்னர் சூர்யவன்ஷியை மைதானத்தில் சந்தித்து பேசினார். அப்படி வைபவ் சூரியவன்ஷியை சந்தித்து விராட் கோலி என்னென்ன அறிவுரைகளை வழங்கினார்? என்பது குறித்து தற்போது சூரியவன்ஷி வெளிப்படையாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
முன்னர் நான் ஆர்.சி.பி அணியின் ரசிகராக இருந்தேன். அதிலும் குறிப்பாக விராட் கோலியின் மிகப்பெரிய விசிறி நான். விராட் கோலி என்னிடம் வந்து என் தோள் மீது கை போட்டு பேசியதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அந்த தருணம் ஒரு கனவு மாதிரி இருந்தது. அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதை வெளிக்காட்டவே இல்லை. ஒரு மூத்த அண்ணன் போன்ற எனக்கு அறிவுரைகளை வழங்கினார். மேலும் நான் இங்கிருந்து முன்னேறி செல்ல என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த வழிகாட்டுதலையும் வழங்கினார்.
இதையும் படிங்க : 21 ஆண்டுகள் கழித்து இரண்டாவது வரலாற்று வெற்றியை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பதிவுசெய்த – வங்கதேச அணி
குறிப்பாக “நீ இங்கிருந்து இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு செல்ல வேண்டும்”, உன்னுடைய நம்பிக்கையும் உன்னுடைய கடின உழைப்பும் தான் உன்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. எனவே நீ உன்னுடைய ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தி வெளியில் இருந்து வரும் எந்த கருத்திற்கும் செவி சாய்க்காதே என அறிவுரை வழங்கியதாகவும் வைபவ் சூர்யவன்ஷி கூறியது குறிப்பிடத்தக்கது.



