21 ஆண்டுகள் கழித்து இரண்டாவது வரலாற்று வெற்றியை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பதிவுசெய்த – வங்கதேச அணி

Ban vs Aus
- Advertisement -

வங்கதேச கிரிக்கெட் அணியானது தங்களது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது மே 9-ஆம் தேதி டாக்கா நகரில் நடைபெற்றது.

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய வங்கதேச அணி :

அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 284 ரன்கள் குவித்தது. வங்கதேச அணி சார்பாக அதிகபட்சமாக மொசடக் ஹுசைன் 86 ரன்களையும், நஜ்முல் ஷாண்டோ 67 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது வங்கதேச அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 42.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்திருந்தது. எப்படியும் ஆஸ்திரேலிய அணியின் தோல்வி உறுதி என்கிற வேளையில் மழை பெய்ததின் காரணமாக போட்டி அங்கேயே நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக பங்களாதேஷ் அணி டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 86 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 21 ஆண்டுகள் கழித்து வங்கதேச அணி ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நிகழ்த்தியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இலங்கை ஏ அணிக்கெதிரான போட்டியில் சதம் அடித்து தேர்வாளர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டிய – ருதுராஜ் கெய்க்வாட்

அதாவது கடந்த 2005-ஆம் ஆண்டு வங்கதேச அணி முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்தியிருந்தது. அதன் பிறகு தற்போது 21 ஆண்டுகள் கழித்து ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement