இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று சிறப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடர் இந்த 2026 ஆம் ஆண்டு 19-வது சீசனாக தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் இன்னும் சில தினங்களில் இறுதி போட்டியானது நடைபெற உள்ளது.
ஐ.பி.எல் அட்டவணையில் ஏற்படவுள்ள மாற்றம் : அருண் துமால்
இவ்வேளையில் அடுத்த 2027 ஐ.பி.எல் தொடருக்கான விவாதங்கள் தற்போதே ஆரம்பித்துவிட்டன. அதிலும் குறிப்பாக ஐ.பி.எல் போட்டிகளின் அட்டவணை மாற்றம் ஏற்படவுள்ளதாக சில தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்தது. மேலும் இன்னும் ஒரு சில அணிகள் சேர்க்கப்படலாம் என்றும் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இவ்வேளையில் ஐ.பி.எல் தொடருக்கான போட்டிகள் நடைபெறும் அட்டவணை மாற்றப்பட இருப்பது குறித்து ஆலோசித்து வருவதாக ஐ.பி.எல் தலைவர் அருண் துமால் சில விளக்கங்களை அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது : தற்போது ஐ.பி.எல் தொடரின் கால அட்டவணையை மாற்ற அவசியம் எதுவும் இல்லை ஒருவேளை மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒளிபரப்பு நிறுவனங்களுடன் ஆலோசித்த பிறகு முடிவு செய்யப்படும்.
கோடைகால வெப்பம் காரணமாக வீரர்கள் உடல் சோர்வு ஏற்படுவதாலும், போட்டிகளை எண்ணிக்கையை எதிர்காலத்தில் அதிகப்படுத்த இருப்பதாலும் பி.சி.சி.ஐ ஐபிஎல் அட்டவணையை மாற்றம் செய்ய ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரானது எதிர்காலத்தில் தீபாவளி பண்டிகையை கணக்கில் கொண்டு கொண்டு கோடை முடிந்து செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் நடத்துவது குறித்த ஆலோசனையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கேப்டன் பதவி மட்டுமல்ல.. ஒட்டுமொத்தமாக காலியாகும் ஹார்டிக் பாண்டியா – விவரம் இதோ
இருந்தாலும் பி.சி.சி.ஐ தான் இந்த விடயத்தில் முக்கிய முடிவை எடுக்கும். ஏனெனில் இந்திய அணியின் சர்வதேச போட்டிகளின் அட்டவணை மாற்றம் செய்தால் மட்டுமே ஐ.பி.எல் போட்டிகளின் அட்டவணை மாற்றம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.



