இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது லீக் சுற்று போட்டிகளின் முடிவில் 14 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. அதன் பின்னர் குவாலிஃபயர் 1 போட்டியில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியிருந்தது.
4 ஆவது அணியாக ஆர்.சி.பி நிகழ்த்திய சாதனை :
அந்த வகையில் நேற்று விளையாடிய ஆர்.சி.பி அணி முதலில் பேட்டிங் செய்து 254 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது ஆர்.சி.பி அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 162 ரன்களுக்கு சுருண்டது.
இதன் காரணமாக 92 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான வெற்றியை பெற்று ஆர்.சி.பி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது சி.எஸ்.கே, மும்பை மற்றும் குஜராத் ஆகிய அணிகளுக்கு அடுத்து நான்காவது அணியாக ஒரு முக்கிய சாதனையை ஐ.பி.எல் போட்டிகளில் நிகழ்த்தியுள்ளது.
அது குறித்து தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ஆர்.சி.பி அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் : கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்.சி.பி அணி இந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க : நாங்க செய்ஞ்ச இந்த தப்பு தான் தோல்விக்கு காரணம்.. ஆர்.சி.பிக்கு எதிரான தோல்விக்கு பிறகு – சுப்மன் கில் பேச்சு
இதன்மூலம் ஒரு சீசனில் கோப்பையை வென்று அடுத்த சீசன் இறுதிப்போட்டிக்கு வரை சென்ற அணிகளாக சி.எஸ்.கே, மும்பை மற்றும் குஜராத் ஆகிய அணிகள் இருந்த வேளையில் அந்த சாதனையை செய்த நான்காவது அணியாக ஆர்.சி.பி அணி புதிய உச்சத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



