நாங்க செய்ஞ்ச இந்த தப்பு தான் தோல்விக்கு காரணம்.. ஆர்.சி.பிக்கு எதிரான தோல்விக்கு பிறகு – சுப்மன் கில் பேச்சு

Shubman Gill
- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிஃபயர் போட்டியில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 255 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி 92 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணியிடம் தோல்வியை சந்தித்து இரண்டாவது குவாலிஃபயர் ஆட்டத்தில் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு சென்றுள்ளது.

ஆர்.சி.பி அணிக்கெதிரான தோல்வி குறித்து : சுப்மன் கில் பேச்சு

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆர்.சி.பி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்தது. பின்னர் 255 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 162 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

அதன் காரணமாக 92 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஃசுப்மன் கில் கூறியதாவது : இந்த போட்டியில் 12-வது, 13-வது ஓவர் வரை நாங்கள் ஆட்டத்தில் இருந்ததாக நினைக்கிறோம். அதன்பிறகு ஆட்டம் எங்கள் கைவசம் இருந்து சென்றது.

இந்த போட்டியில் நாங்கள் பீல்டிங்கில் நிறைய தவறுகளை செய்துள்ளோம். கைக்கு வந்த கேட்ச்களை தவற விட்டுள்ளோம். பீல்டிங்கில் இப்படி நடந்தால் எதிரணி ஆதிக்கம் செலுத்தி விடுவார்கள். அந்த வகையில் ஏற்கனவே நாங்கள் இதுபோன்ற தவறுகளை செய்த வேளையில் இந்த போட்டியில் இந்த தவறு நிகழ்ந்தது தோல்விக்கு காரணமாக பார்க்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான எங்களது பிளான் இதுதான்.. வெற்றிக்கு பிறகு – ரஜத் பட்டிதார் பேச்சு

பயிற்சியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் களத்தில் அதனை செயல்படுத்த வேண்டும். அப்படி இல்லையெனில் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement