ரோஹித் சர்மாவின் பிரமாண்ட ரெக்கார்டை காலி செய்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

Jaiswal and Rohit
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் தனது அற்புதமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக மும்பை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் 17 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 27 ரன்கள் குவித்து அசத்தினார்.

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால் :

ஏற்கனவே ஐ.பி.எல் போட்டிகளில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவ்வேளையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியின் முதல் ஓவரில் அவர் அடித்த ஒரு சிக்ஸரின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனை ஒன்றினை ஐ.பி.எல் போட்டிகளில் முறியடித்துள்ளார்.

- Advertisement -

அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் யாஷஸ்வி ஜெயஸ்வால் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய இந்த போட்டியின் போது தீபக் சாகர் வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் ஒரு பிரமாண்ட சிக்ஸரை பறக்கவிட்டார்.

இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் போட்டியின் முதல் ஓவரிலேயே அதிக சிக்சர்களை அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளி தற்போது அவர் முதலிடத்தில் உள்ளார். இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் முதல் ஓவரில் 13 சிக்ஸர்களை ரோகித் சர்மா விளாசி முதலிடத்தில் இருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : கிறிஸ் கெயிலை தாண்டி இந்த சாதனையை டி20 போட்டிகளில் நிகழ்த்துவேன் – வைபவ் சூர்யவன்ஷி உறுதி

இவ்வேளையில் தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் சிக்சர் அடித்ததோடு சேர்த்து இதுவரை ஐபிஎல் போட்டியில் 14 முறை முதல் ஓவரில் சிக்ஸர் அடித்து ஜெய்ஸ்வால் இந்த சாதனை நிகழ்த்தியுள்ளார். இவர்கள் இருவருக்கு அடுத்து சேவாக், கெயில் மற்றும் விராட் கோலி ஆகியோர் 12 முறை முதல் ஓவரில் சிக்ஸ் அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement