இந்த சீசன்ல இப்படி நடந்தது வருத்தமா இருக்கு.. டெல்லி அணிக்கு எதிரான தோல்விக்கு பின் – ரஹானே பேச்சு

Ajinkya Rahane
- Advertisement -

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 70-வது லீக் போட்டியில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 40 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியிடம் தோல்வியை தழுவி இந்த தொடரில் தங்களது ஏழாவது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்து வெளியேறியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது.

டெல்லி அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு : அஜின்க்யா ரஹானே பேச்சு

அடுத்ததாக 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 163 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக 40 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் நேற்று இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பின்னர் பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே கூறியதாவது :

- Advertisement -

இந்த மைதானத்தில் பந்து சற்று நின்று வந்ததால் முதலில் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. ஆனால் இந்த போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் இன்னிங்சை அதிரடியாக கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்ததால் நான் வாய்ப்புகளை பயன்படுத்தி அதிரடியாக விளையாடினேன். அதே நேரத்தில் ஸ்ட்ரைக் ரொட்டேஷன் செய்யவும் நினைத்தேன். ஆனாலும் இந்த போட்டி நாங்கள் நினைத்த விதத்தில் செல்லாமல் தோல்வியில் முடிந்தது.

இந்த தொடரில் நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை அடைகிறேன். ஏனெனில் முதல் ஆறு போட்டிகளுக்குப் பிறகு மீண்டும் கம்பேக் கொடுப்பது மிகச் சிறப்பான ஒன்று. அதற்கு தனி நம்பிக்கையும், திறனும் தேவை. ஏனெனில் ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடரில் முதல் பாதியில் தோல்விகளை சந்தித்து விட்டு அடுத்த பாதியில் மீண்டும் வெற்றிகளை பெறுவது என்பது கடினமான விடயம். ஆனால் எங்களது வீரர்கள் இரண்டாம் பாதியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

இதையும் படிங்க : இதை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.. கொல்கத்தாவை வீழ்த்திய பின்னர் – அக்சர் படேல் பேட்டி

இப்படி ஒரு கடினமான போராட்டத்திற்கு பிறகு நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாததை நினைத்தால் வருத்தமாக உள்ளது. ஆனாலும் இந்த தொடரில் எங்களது அணியின் வீரர்கள் செயல்பட்ட விதத்தை நினைத்து பெருமையாகவும் இருக்கிறது. நிச்சயம் அடுத்த ஆண்டு வலிமையாக திரும்புவோம் என அஜின்க்யா ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement