இதை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.. கொல்கத்தாவை வீழ்த்திய பின்னர் – அக்சர் படேல் பேட்டி

Axar Patel
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 70-வது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

கொல்கத்தா அணியை வீழ்த்திய பிறகு பேசிய : அக்சர் படேல்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது. டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக கே.எல் ராகுல் 60 ரன்களையும், அக்சர் பட்டேல் 39 ரன்களையும் குவித்தனர். பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது :

- Advertisement -

18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக டெல்லி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் கூறியதாவது : கடந்த மூன்று போட்டிகளாகவே நாங்கள் சிறப்பாக விளையாடியுள்ளோம். எங்கள் அணி பக்கம் நல்ல விடயம் செல்லவில்லை என்றாலும் நாங்கள் போராடியது மிகவும் பெருமை அளிக்கிறது.

இந்த தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறி விட்டோம் என்று யாரும் விட்டுக் கொடுக்காமல் விளையாடினர். இப்படி அர்ப்பணிப்புடன் விளையாடியதை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. முதலில் தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி ஒப்புக் கொண்டால் தான் அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு மீண்டும் பலமாக திரும்ப முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவுக்கு அடுத்து 2 ஆவது மும்பை இந்தியன்ஸ் வீரராக சூரியகுமார் யாதவ் – நிகழ்த்திய சாதனை

அந்த வகையில் நாங்கள் இந்த தொடரில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு நிச்சயம் பாசிட்டிவாக வருவோம். இந்த சீசன் எங்களுக்கு ஏற்றத்தாழ்வாக அமைந்தாலும் இதிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களை வைத்து அடுத்த சீசனில் வலிமையான அணியாக திரும்புவோம் என அக்சர் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement