ரோஹித் சர்மாவுக்கு அடுத்து 2 ஆவது மும்பை இந்தியன்ஸ் வீரராக சூரியகுமார் யாதவ் – நிகழ்த்திய சாதனை

Suryakumar Yadav
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 69-ஆவது லீக் போட்டியில் விளையாடியிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது ஒன்பதாவது தோல்வியை பதிவு செய்து வெளியேறியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய :

சூரியகுமார் யாதவ் நிகழ்த்திய அசத்தல் சாதனை :

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக நான்காவது வீரராக களமிறங்கி விளையாடிய சூரியகுமார் யாதவ் 42 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 60 ரன்கள் குவித்து ஓரளவு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் அவர் அடித்த இந்த 60 ரன்களின் மூலம் இரண்டாவது மும்பை இந்தியன்ஸ் அணி வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

அதிலும் குறிப்பாக ரோகித் சர்மாவிற்கு அடுத்து அவர் நிகழ்த்தியுள்ள இந்த சாதனை பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரராக ரோகித் சர்மா 6432 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கும் வேளையில் அவருக்கு அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4000 ரன்களை பூர்த்தி செய்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை சூரியகுமார் யாதவ் நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : கிளென் மேக்ஸ்வெல்லின் மோசமான சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா – விவரம் இதோ

நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய அவர் 270 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்திருந்த வேளையில் இந்த தொடரின் கடைசி போட்டியில் ஓரளவு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அரைசதத்துடன் இந்த தொடரை அவர் நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement