அடுத்த 2027 ஆம் ஆண்டு தோனியை சி.எஸ்.கே அணியில் பார்க்க முடியுமா? – ருதுராஜ் அளித்த பதில்

Ruturaj and Dhoni
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நேற்று அஹமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 65-ஆவது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த தொடரின் கடைசி லீக் போட்டியான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று சி.எஸ்.கே அணி மரியாதையுடன் விடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்றைய போட்டியிலும் 89 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியிடம் தோல்வியை சந்தித்தது.

எம்.எஸ் தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா? : ருதுராஜ் பதில்

இதன் மூலம் நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் 14 போட்டியில் விளையாடிய சி.எஸ்.கே அணி 8 தோல்விகளை சந்தித்து 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்து வெளியேறியது. இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்தே எம்.எஸ் தோனி விளையாடுவாரா? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்றைய போட்டியோடு சி.எஸ்.கே அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியதால் இந்த சீசனில் தோனி ஒரு போட்டியில் கூட விளையாடாமல் சென்றுள்ளார்.

- Advertisement -

ஐ.பி.எல் வரலாற்றில் எந்த ஒரு சீசனிலும் இதுபோன்று அவர் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் இருந்தது கிடையாது. இவ்வேளையில் தற்போது 44 வயதான எம்.எஸ் தோனி இந்த ஆண்டுடன் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட விளையாடாத அவர் இப்போதே ஓய்வு அறிவிப்பாரா? அல்லது அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக ஒரு போட்டியில் விளையாடியதற்கு பிறகு ஓய்வை அறிவிப்பாரா? என்று கேள்வி அதிகளவில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பின்னர் இந்த விவகாரம் குறித்து பரிசளிப்பு விழாவின் போது பேசிய சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது : நிச்சயமாக தோனி விளையாடுவாரா? இல்லையா? என்பது அடுத்த ஆண்டு உங்களுக்கு தெரிய வரும். எனக்கும் அதேபோன்று அடுத்த ஆண்டு தான் தெரியவரும். உண்மையிலேயே அவர் விளையாடாதது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு.

- Advertisement -

இதையும் படிங்க : இத்தனை ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக தோனிக்கு நேர்ந்த ஏமாற்றம் – விவரம் இதோ

எதிரணிக்கு அச்சத்தை ஏற்படுத்தி கடைசி ஓவர்களில் அவர் களமிறங்கும் போது போட்டியின் முடிவையே மாற்றக்கூடிய ஒரு வீரர். அவர் இல்லாதது எங்களுக்கு நிச்சயம் ஒரு பின்னடைவு தான். இந்த ஆண்டு அவரை மிகவும் மிஸ் செய்தோம். அடுத்த சீசன் பற்றி எனக்கு தெரியாது ஆனாலும் எங்களிடம் இருந்த வீரர்களை வைத்து நாங்கள் விளையாடிய விதத்தில் மகிழ்ச்சி அடைகிறோம் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement