கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இந்த ஆண்டு 19 ஆவது சீசனாக இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 28-ஆம் தேதி துவங்கிய இந்த ஐ.பி.எல் தொடர் இன்னும் சில வாரங்களில் நிறைவடைய காத்திருக்கிறது. இந்த தொடருக்கான பிளே ஆப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன.
முதல் முறையாக ஏமாற்றத்தை சந்தித்த தோனி :
அதனை தொடர்ந்து நான்காவது இடத்திற்கான போட்டி தற்போது பலமாக நீடித்து வருகிறது. இந்த தொடரின் பிளே ஆப் சுற்று வாய்ப்பினை ஏற்கனவே லக்னோ, மும்பை, சென்னை ஆகிய அணிகள் இழந்த வேளையில் நான்காவது இடத்திற்காக ராஜஸ்தான், பஞ்சாப், கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய வேளையில் நேற்றைய போட்டியிலும் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது. இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்தே சி.எஸ்.கே அணிக்காக தோனி ஒரு போட்டியிலாவது விளையாடிவிட்டு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காயம் காரணமாக எந்த ஒரு போட்டியிலும் விளையாடாமல் இருந்த தோனி நேற்றைய கடைசி லீக் ஆட்டத்திலும் விளையாடவில்லை. இதன் காரணமாக 19 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக தோனி மிகப்பெரும் ஒரு ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்.
இதையும் படிங்க : பிளே ஆப் சுற்றுக்கு முன்னாடி நாங்க இதை செய்ததில் மகிழ்ச்சி.. குஜராத் கேப்டன் – சுப்மன் கில் மகிழ்ச்சி
அதாவது இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து சீசன்களிலும் தோனி விளையாடியிருந்த வேளையில் ஒரு சீசன் முழுவதுமாக விளையாடாமல் முதல் முறையாக ஏமாற்றத்தை சந்தித்துள்ளார். தற்போது 44 வயதாகும் தோனி அடுத்த ஆண்டு விளையாடுவது சந்தேகம் என்பதனால் அவர் விரைவில் ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.



