ருதுராஜ் கெய்க்வாட் தலைமையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நேற்று அஹமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 66-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. லீக் சுற்று போட்டியின் கடைசி ஆட்டத்தில் விளையாடிய சென்னை அணி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடி குஜராத் அணியின் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை குவித்தது.
குஜராத் அணிக்கெதிரான தோல்விக்கு பின்னர் : ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி
பின்னர் அடுத்ததாக 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சி.எஸ்.கே அணி 13.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. அதேவேளையில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த சி.எஸ்.கே அதிகாரப்பூர்வமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது : இதுபோன்ற பெரிய இலக்கினை சேசிங் செய்யும் போது அதிரடியாக விளையாட வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக 20 ஓவர்களில் 230 ரன்களை சேசிங் செய்யும் போது மிக அதிரடியான ஆட்டம் தேவை.
ஆனால் இந்த மைதானத்தில் இந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடுவது என்பது எளிது கிடையாது. அந்த அளவிற்கு குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக விளையாடி அனைத்து துறைகளிலும் எங்களை வீழ்த்தி விட்டனர். இந்த தொடர் முழுவதுமே எங்களது பீல்டிங் மற்றும் பவுலிங்கில் சில குறைகள் இருந்துள்ளன. அதேபோன்று பவர் பிளேவிலும் நாங்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
இதையும் படிங்க : அதிகாரப்பூர்வமாக சி.எஸ்.கே அணியை தொடரில் இருந்து வெளியேற்றிய குஜராத் – விவரம் இதோ
குஜராத் அணியை பொறுத்தவரை இந்த போட்டியில் அவர்களது துவக்க வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். நாங்கள் 200 ரன்களுக்குள் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தோம். ஆனால் அது முடியாமல் போனது இந்த தொடர் முழுவதுமே எங்களுக்கு மிக கடினமான ஒரு பயணமாக இருந்ததாகவும் ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.



