குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் போட்டியில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 29 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவராக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கே.கே.ஆர் அணி :
குஜராத் அணிக்கெதிரான வெற்றிக்கு பின்னர் : ரஹானே பேட்டி
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்களை குவிக்க பின்னர் 248 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 29 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே கூறியதாவது : இந்த போட்டி ஒரு நல்ல போட்டியாக எங்களுக்கு அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் கிடைத்த இரண்டு புள்ளிகள் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆட்டத்தில் டாசில் நாங்கள் தோற்ற பின்னர் பேட்டிங் செய்ய வந்து அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளதாக நினைக்கிறேன்.
பின் ஆலன், அன்க்ரிஷ் ரகுவன்ஷி, கேமரூன் கிரீன் ஆகிய மூவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களது பார்ட்னர்ஷிப்பின் போது நல்ல இன்டென்ட்டும் இருந்ததால் பெரிய ரன் குவிப்பை நோக்கி போட்டி நகர்ந்தது. இந்த மூவரும் சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தேவையான ரன்களை விட கூடுதல் ரன்களும் கிடைத்தன. பின்னர் எங்களது பந்துவீச்சாளர்களும் மிகச்சிறப்பாக செயல்பட இந்த வெற்றி எங்களுக்கு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க : பேட்டிங்ல எந்த தப்பும் இல்ல.. தோல்விக்கு இந்த சொதப்பல் மட்டும் தான் காரணம் – சுப்மன் கில் வருத்தம்
இந்த போட்டியில் பேட்ஸ்மேன்களே வெற்றிக்கு முழுக்க காரணமாக நினைக்கிறேன். ஏனெனில் தரம் வாய்ந்த குஜராத் டைட்டன்ஸ் அணிணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக எங்களது பேட்ஸ்மேன்கள் அவர்களை தொடர்ந்து அழுத்தத்தில் வைத்து ரன்களை குவித்ததாலே இந்த வெற்றி கிடைத்தது என்றும் ரகானே பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



