அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பிரமாதமான வெற்றி பெற்று அட்டகாசமாக இந்த தொடரை ஆரம்பித்தது. ஆனால் அதன் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வந்த டெல்லி அணி இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 12 போட்டிகளில் 5 வெற்றி மட்டுமே பெற்று புள்ளி பட்டியில் ஏழாவது இடத்தில் உள்ளது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் :
இனிவரும் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் கூட டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு இல்லை என்பதனால் கிட்டத்தட்ட இந்த தொடரில் இருந்து வெளியேறுவது உறுதி. இந்த தொடரின் ஆரம்பத்தில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி பின்னர் போகப்போக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அந்த அணியின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இவ்வேளையில் அடுத்த 2027 ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கேப்டன் அக்சர் பட்டேல் இந்த தொடர் முழுவதுமே பேட்டிங்கிலும் சரி, பந்து வீச்சிலும் சரி மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு வேறு ஒரு வீரருக்கு கேப்டன் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
அதே போன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ஹேமங் பதானியின் முடிவுகளும் தவறாக மாறியுள்ளதால் அவரும் அவரது பயிற்சி குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அந்த அணி நிர்வாகம் மாற்றத்தை நிகழ்த்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் மாபெரும் சாதனையை சமன் செய்த விராட் கோலி – விவரம் இதோ
இப்படி கேப்டன் மற்றும் பயிற்சியாளர் என இருவருமே கூண்டோடு மாற்றப்பட்டு அடுத்த முறை டெல்லி கேபிட்டல்ஸ் அணி புதிய மாற்றத்துடன் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



