டி20 போட்டிகளில் இப்படி நடப்பது சகஜம் தான்.. குஜராத் அணிக்கெதிரான தோல்விக்கு பின்னர் – பேட் கம்மின்ஸ் பேச்சு

Pat Cummins
- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் போட்டியில் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 82 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியிடம் தோல்வியை தழுவி இந்த தொடரில் தங்களது ஐந்தாவது தோல்வியை பதிவு செய்தது. அதேவேளையில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் அணி எட்டாவது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.

குஜராத் அணிக்கெதிரான தோல்வி குறித்து : பேட் கம்மின்ஸ் பேச்சு

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவிக்க பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 86 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக 82 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது : குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியின் இரண்டாம் பாதியில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். சேசிங்கை ஆரம்பிக்கும் போது நாங்கள் மகிழ்ச்சியாகவே களமிறங்கினோம்.

ஆனாலும் பேட்டிங்கிற்கு சவாலான இந்த ஆடுகளத்தில் குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களை பின்னுக்கு தள்ளினர். அதோடு இந்த மைதானத்தில் பந்துவீச்சுக்கு கூடுதல் சாதகம் இருந்ததால் அதை அவர்கள் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார்கள். எங்களது அணியின் பேட்டிங் ஆர்டர் மிக பலம் வாய்ந்த ஒன்றுதான். ஆனால் டி20 போட்டிகளில் இதுபோன்று பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவது சகஜம் தான்.

- Advertisement -

இதையும் படிங்க : சன் ரைசர்ஸ் அணியை இப்படி வீழ்த்தி நாங்கள் பெற்ற வெற்றிக்கு காரணம் இதுதான் – சுப்மன் கில் மகிழ்ச்சி

இந்த தொடரில் எங்களது அணியின் முதல் நான்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். அவர்களுக்கு இன்று ஒரு மோசமான நாளாக இருந்துள்ளது. இருந்தாலும் இந்த தோல்வியிலிருந்து பல்வேறு பாடங்களை கற்றுக்கொண்ட நாங்கள் நிச்சயம் அடுத்த போட்டியில் பலமாக திரும்புவோம் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement