சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக கணுக்கால் பகுதியில் காயமடைந்தார். இதன் காரணமாக இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் தோனி பங்கேற்க மாட்டார் என ஏற்கனவே சி.எஸ்.கே அணியின் நிர்வாகம் அறிவித்திருந்தது.
மஹேந்திர சிங் தோனி விளையாடப்போவது எப்போது? :
அந்த வகையில் இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளை தோனி தவற விட்டார். அதே வேளையில் காயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த அவர் எப்போது விளையாடுவார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த வேளையில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 11 ஆட்டங்களிலும் தோனி பங்கேற்கவில்லை. இதனால் இந்த தொடரில் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
காயத்திலிருந்து மீண்டும் திரும்பி வந்துள்ள தோனி தற்போது பயிற்சியை மேற்கொண்டாலும் சென்னை அணியின் வீரர்களுடன் பயணிக்காமல் இருந்து வந்தார். இவ்வேளையில் மே 15-ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக லக்னோ நகரில் நடைபெற இருக்கும் போட்டிக்கான சிஎஸ்கே அணியுடன் பயணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அப்படி அங்கு பயணித்தாலும் அவர் அந்த போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. ஏனெனில் காயம் காரணமாகவும் அணியின் தற்போதைய வெற்றி காம்பினேஷனை மாற்றக்கூடாது என்பதற்காகவும் தோனி அந்த போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : யுஸ்வேந்திர சாஹலுக்கு எதிரா இப்படி செய்தது தவறு.. ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியை விமர்சித்த – முகமது கைப்
அதே வேளையில் அந்த போட்டி முடிந்த பின்னர் சென்னையில் நடைபெற இருக்கும் கடைசி ஹோம் லீக் போட்டியில் மே 18-ஆம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிராக பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



