இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 54-வது லீக் போட்டியானது ராய்ப்பூர் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரஜத் பாட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சூரியகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன. அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ஆர்.சி.பி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
தோனியின் சாதனையை சமன் செய்த ரோஹித் மற்றும் விராட் :
அதனை தொடர்ந்து தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பை பிரகாசமாக்கும் முனைப்போடு ஆர்.சி.பி அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்புடன் மும்பை அணியும் விளையாடி வருகின்றன.
இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆர்.சி.பி அணியின் சார்பாக நட்சத்திர வீரராக விளையாடி வரும் விராட் கோலியும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக துவக்க வீரராக விளையாடி வரும் ரோஹித் சர்மாவும் மகேந்திர சிங் தோனியின் மாபெரும் சாதனை ஒன்றினை சமன் செய்துள்ளனர்.
அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தினை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இணைந்து செய்த சாதனை யாதெனில் : இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரராக மகேந்திர சிங் தோனி 278 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் இருந்தார்.
இதையும் படிங்க : ஏ.பி.டி-யின் 11 ஆண்டுகால சாதனையை தகர்த்த சி.எஸ்.கே வீரர் உர்வில் படேல் – விவரம் இதோ
இந்நிலையில் இன்று ஆர்.சி.பி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கியுள்ள விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருமே ஐ.பி.எல் போட்டிகளில் தங்களது 278 ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இதன் காரணமாக ஐ.பி.எல் போட்டிகளில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரர்களாக தற்போது தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய மூவரும் சமநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



