லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 53-வது லீக் போட்டியில் விளையாடிய சி.எஸ்.கே அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அசத்தியது. மேலும் இன்றைய போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் சி.எஸ்.கே அணியானது தற்போது தங்களது பிளே ஆப் வாய்ப்பையும் உயிர்ப்புடன் வைத்துள்ளது. அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
ஏ.பி.டி வில்லியர்ஸின் சாதனையை தகர்த்த உர்வில் படேல் :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவிக்க பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. இதன் காரணமாக சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக உர்வில் பட்டேல் 23 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர் என 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்தின் காரணமாகவே சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
இவ்வேளையில் இந்த போட்டியின் போது விளையாடிய சி.எஸ்.கே அணியின் இளம் வீரரான உர்வில் பட்டேல் முன்னாள் ஆர்.சி.பி அணியின் வீரரான ஏ.பி.டி வில்லியர்ஸின் மாபெரும் சாதனை ஒன்றினை ஐ.பி.எல் போட்டிகளில் முறியடித்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஐபிஎல் போட்டிகளில் முதல் 10 பந்துகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஏ.பி.டி முதலிடத்தில் இருந்தார்.
இதையும் படிங்க : இது உங்களுக்காக தான்.. 13 பந்துகளில் அரைசதம் அடித்த பின்னர் – பேப்பரை எடுத்து நீட்டிய உர்வில் படேல்
கடந்த 2015-ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற போட்டியின் போது மும்பை அணிக்கு எதிராக அவர் 10 பந்துகளில் 41 ரன்கள் அடித்திருந்தார். இவ்வேளையில் இன்று சென்னை மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக தான் சந்தித்த முதல் 10 பந்துகளில் 42 ரன்களை குவித்த உர்வில் படேல் ஏ.பி.டி-யை கடந்து 11 ஆண்டுகால சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



