டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியையும் தவறவிடும் எம்.எஸ் தோனி – காரணம் என்ன?

MS Dhoni
- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. அதனைத்தொடர்ந்து இந்த தொடரில் இன்னும் எஞ்சியுள்ள 5 ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்று விளையாட காத்திருக்கிறது.

அடுத்த போட்டியையும் தவறவிடும் எம்.எஸ் தோனி :

இந்த தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணியின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு உயிர்ப்புடன் இருக்கும். இதன் காரணமாக எதிர்வரும் எஞ்சிய போட்டிகள் சென்னை அணிக்கு முக்கியமான போட்டிகளாக மாறியுள்ளன. இந்த போட்டிகளில் தோனி விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

இந்த 2026 ஐ.பி.எல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆரம்பகட்ட போட்டிகளை தவறவிட்ட அவர் தற்போது வரை 9 போட்டிகளில் விளையாடாமல் வெளியில் உள்ளார். எனவே இனிவரும் சில போட்டிகளில் விளையாடி சி.எஸ்.கே அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.

ஆனால் அடுத்தாக மே 6 ஆம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக டெல்லி நகரில் நடைபெறயிருக்கும் போட்டியையும் தோனி தவறவிடவுள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் யாதெனில் :

- Advertisement -

இதையும் படிங்க : பஞ்சாப் கிங்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி நங்கள் பெற்ற வெற்றிக்கு இதுவே காரணம் – சுப்மன் கில் மகிழ்ச்சி

தோனி மெல்ல மெல்ல காயத்தில் இருந்து மீண்டும் வரும் வேளையில் அவர் இன்னும் முழு உடற்தகுதியை எட்டவில்லை. எனவே அவர் 100% உடற்தகுதியை எட்டும் வரை அவரை அவசரப்பட்டு விளையாட வைக்கக்கூடாது என சி.எஸ்.கே அணி நிர்வாகம் நினைக்கிறது. அதையே தான் தோனியும் நினைக்கிறார். எனவே டெல்லி போட்டிக்காக அங்கு செல்லாமல் சென்னையிலேயே இருந்து அவர் சிகிச்சையும், பயிற்சியையும் மேற்கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement