ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் தனது அட்டகாசமான பேட்டிங் ஃபார்மை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார். ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ள விராட் கோலி நேற்றைய போட்டியிலும் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
3 ஆவது ஆர்.சி.பி வீரராக விராட் கோலி நிகழ்த்திய சாதனை :
அந்த வகையில் ஐ.பி.எல் போட்டிகளில் இந்திய மண்ணில் மட்டும் 8000 ரன்களை குவித்த முதல் வீரராக சாதனை நிகழ்த்தியிருந்தார். நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி முதலில் விளையாடி 155 ரன்களை குவிக்க பின்னர் அடுத்ததாக விளையாடிய குஜராத் அணி 156 ரன்கள் என்கிற இலக்கினை 15.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 158 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இருந்தாலும் இந்த போட்டியில் சில குறிப்பிட்ட சாதனைகளை விராட் கோலி நிகழ்த்தியிருந்தார். அந்த வகையில் கிரிஸ் கெயில் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோருக்கு அடுத்து 3 ஆவது ஆர்.சி.பி வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை ஆர்.சி.பி அணிக்காக அவர் நிகழ்த்தி இருந்தார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை ஆர்.சி.பி அணிக்காக கிரிஸ் கெயில் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் மட்டுமே ஒரு ஓவரில் 5 பவுண்டரிகளை விளாசிய பேட்ஸ்மேன்களாக இருந்து வந்தனர். கடந்த 2013 ஆம் ஆண்டு கிரிஸ் கெயில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராகவும், கடந்து 2016 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக ஷேன் வாட்னும் ஒரு ஓவரில் 5 பவுண்டரிகளை அடித்திருந்தனர்.
இதையும் படிங்க : ஆர்.சி.பி அணிக்கு எதிராக இப்படி ஒரு வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி – சுப்மன் கில் மகிழ்ச்சி
இவ்வேளையில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது ரபாடா வீசிய இரண்டாவது ஓவரில் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை விளாசி விராட் கோலி அந்த பட்டியலில் மூன்றாவது ஆர்.சி.பி வீரராக ஒரே ஓவரில் 5 பவுண்டரிகளை அடித்த வீரராக அந்த சாதனையில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.



