ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு அடுத்து இரண்டாவது பவுலராக மாபெரும் சாதனை நிகழ்த்திய – புவனேஷ்வர் குமார்

Bhuvi and Bumrah
- Advertisement -

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நேற்று அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டியில் விளையாடியிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் மிக எளிதாக வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஆறாவது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளே ஆப் வாய்ப்பும் பிரகாசமாக மாறியுள்ளது.

பும்ராவுக்கு அடுத்து மாபெரும் சாதனை நிகழ்த்திய புவனேஷ்வர் குமார் :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியை ஆர்.சி.பி அணி 75 ரன்கள் சுருட்டி அசத்தியது. இப்படி டெல்லி அணியை மிக குறைந்த ரன்களில் சுருட்ட காரணமே ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான ஜாஷ் ஹேசல்வுட் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தான். ஏனெனில் இந்த போட்டியின் பவர்பிளே ஓவர்களுக்குள்ளே அவர்கள் இருவரும் இணைந்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணியை பெரிய சரிவுக்கு கொண்டு சென்றனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் 3 ஓவர்கள் பந்துவீசி 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மற்றொரு புறம் ஹேசல்வுட் 12 ரன்களை விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இந்நிலையில் இந்த போட்டியின் போது 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் புவனேஸ்வர் குமார் ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு அடுத்து இரண்டாவது பவுலராக ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

அது குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியில் மூன்று விக்கெட்டுகளை எடுத்ததன் ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை 20 முறை 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவருக்கு முன்னதாக ஜஸ்ப்ரீத் பும்ரா 25 முறை ஐபிஎல் போட்டிகளில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி இந்த சீசன்ல விளையாடணும்னா அதுக்கு இந்த ஒரு வழி மட்டும் தான் இருக்கு – அஷ்வின் கருத்து

இவ்வேளையில் இரண்டாவது பவுலராக ஐ.பி.எல் போட்டிகளில் 20 முறை 3 விக்கெட்டுகளை எடுத்த வீரராக புவனேஷ்வர் குமார் மாறியுள்ளார். இவர்கள் இருவருக்கு அடுத்து லாசித் மலிங்கா 19 முறையும், ஹர்ஷல் பட்டேல் 17 முறையும் ஐ.பி.எல் போட்டிகளில் மூன்று விக்கெட்டுகளை எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement