டிரென்ட் போல்ட்டின் சாதனையை சமன் செய்து அசத்திய புவனேஷ்வர் குமார் – விவரம் இதோ

Bhuvi and Boult
- Advertisement -

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நேற்று அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டியில் விளையாடியிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதோடு இந்த தொடரில் தங்களது ஆறாவது வெற்றியை பதிவு செய்த ஆர்.சி.பி அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தினையும் பிடித்துள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

டிரென்ட் போல்ட்டின் சாதனையை சமன் செய்த புவனேஷ்வர் குமார் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது ஆர்.சி.பி அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16.3 ஓவர்களில் 75 ரன்களில் சுருண்டது. பின்னர் 76 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆர்.சி.பி 6.3 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 77 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆர்.சி.பி அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய புவனேஸ்வர் குமார் 3 ஓவர்கள் பந்துவீசி 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இப்படி அவர் எடுத்த 3 விக்கெட்டுகளின் மூலம் அவர் ஐபிஎல் போட்டிகளில் டிரென்ட் போல்ட்டின் ஒரு சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

நேற்றைய போட்டியின் முதல் ஓவரில் ஒரு விக்கெட்டை வீழ்த்திய அவர் மூன்றாவது ஓவரில் இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். இதன்மூலம் பவர்பிளே ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டிற்கு பிறகு பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக டிரென்ட் போல்ட் 32 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : 15 வயதிலேயே யுனிவர்ஸ் பாஸ் கிரிஸ் கெயிலின் சாதனையை தகர்த்த வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ

இவ்வேளையில் நேற்று புவனேஷ்வர் குமார் எடுத்த 3 விக்கெட்டுகளின் மூலம் அவரும் 2023 ஆம் ஆண்டிற்கு பிறகு பவர்பிளே ஓவர்களில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி டிரென்ட் போல்ட்டுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இனிவரும் போட்டியிலும் புவனேஸ்வர் குமாரின் அசத்தலான பந்துவீச்சு தொடரும் என்பதால் இந்த பட்டியலில் அவர் முதல் இடத்திற்கு முன்னேறவும் பிரமாதமான வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement