விட்டது கேட்ச் இல்ல.. மொத்த மேட்சையும் தான்.. வாஷிங்க்டன் சுந்தர் செய்த தவறு – விராட் கோலி செய்த சம்பவம்

Virat Kohli
- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34 வது லீக் போட்டியில் விளையாடிய ஆர்.சி.பி அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி அசத்தியது. அவர்கள் பெற்ற இந்து வெற்றியின் மூலம் இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்.சி.பி அணி ஐந்து வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.

வாய்ப்பை சரியாக பயன்படுத்திய விராட் கோலி :

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது முதலில் விளையாடிய குஜராத் அணி 205 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய அரி.சி.பி அணிக்கு 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயிக்கப்பட்டது. அதனை மிகச் சிறப்பாக துரத்திய பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 44 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 81 ரன்கள் குவித்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது இந்த சிறப்பான இன்னிங்ஸ் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இவ்வேளையில் நேற்றைய போட்டியில் நடைபெற்ற ஒரு சம்பவம் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் முதலாவது ஓவரை முகமது சிராஜ் வீசுகையில் ரன் எதுவும் எடுக்காமல் இருந்த விராட் கோலி முதல் பந்தையே பீல்டரை நோக்கி அடித்தார். அப்போது கவர் திசையில் நின்ற வாஷிங்டன் சுந்தர் அந்த கேட்சை கோட்டை விட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : குஜராத் அணியை தடுத்து நிறுத்தி நாங்கள் பெற்ற இந்த வெற்றிக்கு காரணம் இதுதான் – ரஜத் பட்டிதார் பேச்சு

அப்படி 0 ரன்னில் கொடுக்கப்பட்ட அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட விராட் கோலி 81 ரன்கள் அடித்து ஆர்.சி.பி அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். நேற்றைய போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விட்டது வெறும் கேட்ச் மட்டும் அல்ல அது மேட்ச் தான் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement