நாங்க செய்ஞ்ச இந்த தப்பு தான் தோல்விக்கு காரணம்.. டெல்லி அணிக்கெதிரான போட்டிக்கு பிறகு – பட்டிதார் வருத்தம்

Rajat Patidar
- Advertisement -

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் ஆட்டத்தில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸில் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

டெல்லி அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு : ரஜத் பட்டிதார் பேச்சு

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணி சார்பாக அதிகபட்சமாக பிலிப் சால்ட் 63 ரன்களையும், டிம் டேவிட் 26 ரன்களையும் குவித்தனர். பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது :

- Advertisement -

19.5 ஓவர்களில் 4 விக்கெடுகளை இழந்து 179 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 60 ரன்கள், கே.எல் ராகுல் 57 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து வருத்தம் தெரிவித்த பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது : உண்மையிலேயே இந்த போட்டி மிகவும் நெருக்கமாக வந்து முடிந்துள்ளது.

ஆனாலும் இந்த போட்டியில் நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக அடித்ததாக நினைக்கிறேன். ஏனெனில் விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்திருந்தனர். மேலும் 12-13 ஓவர்களுக்கு பிறகு அடுத்தடுத்து நாங்கள் விக்கெட்டை இழந்ததால் போட்டியில் பின்னுக்கு தள்ளப்பட்டோம். முதல் இன்னிங்ஸ்சின் போது பந்து சற்று நின்று வந்தது. பந்து வீச்சிலும் நாங்கள் மிகச்சிறப்பாகவே செயல்பட்டு அவர்களை கட்டுக்குள் வைத்திருந்தோம்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆண்ட்ரே ரசலுக்கு அடுத்து 2 ஆவது வீரராக டிம் டேவிட் நிகழ்த்திய இமாலய சாதனை – விவரம் இதோ

இறுதியில் டெல்லி அணியின் வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதில் சற்று சிக்கல் இருந்தது. இருந்தாலும் இது ஒரு நீண்ட தொடர் இந்த போட்டியில் நாங்கள் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்த போட்டியில் பலமாக திரும்புவோம் என ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement