இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 25-ஆவது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
வருண் சக்கரவர்த்தி நிகழ்த்திய அசத்தல் சாதனை :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 79 ரன்களையும், ரோவ்மன் பவல் 27 ரன்களையும் குவித்தனர். பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி :
19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 86 ரன்களையும், ஜாஸ் பட்லர் 25 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி சார்பாக பந்துவீசிய தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களை வீசி 34 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதிலும் குறிப்பாக இந்த போட்டியின் போது ஜாஸ் பட்லரின் விக்கெட்டை வீழ்த்திய அவர் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : கொல்கத்தா அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வரும் வருண் சக்கரவர்த்தி நேற்று ஜாஸ் பட்லர் விக்கெட்டை வீழ்த்திய அவர் கொல்கத்தா அணிக்காக 100 ஐ.பி.எல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : பும்ரா ஒரு விக்கெட் கூட எடுக்காததுக்கு என்ன காரணம்? தெளிவான விளக்கத்தை அளித்த – மஹேலா ஜெயவர்த்தனே
ஏற்கனவே சுனில் நரேன் மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகியோர் கொல்கத்தா அணிக்காக 100 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய வீரர்களாக இருந்த வேளையில் அந்த பட்டியலில் இணைந்த மூன்றாவது வீரராகவும், முதல் இந்திய வீரராகவும் வருண் சக்கரவர்த்தி சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



