இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 22-ஆவது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே தங்களது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.
சேப்பாக்கம் சி.எஸ்.கே அணியின் கோட்டை :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக சஞ்சு சாம்சங் 48 ரன்களையும், டேவால்டு பிரேவிஸ் 41 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு எதிராக 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை மட்டுமே குவித்ததால் சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி சார்பாக ரமன்தீப் சிங் 35 ரன்களையும், ரோவ்மன் பவல் 31 ரன்களையும் குவித்தனர்.
இந்நிலையில் நேற்றைய போட்டி நடைபெற்ற இந்த சென்னை சேப்பாக்கம் மைதானம் சி.எஸ்.கே அணியின் கோட்டை என்பதற்கு சான்றாக ஒரு அற்புதமான சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது. அந்த வகையில் நிகழ்ந்த சம்பவம் சாதனை யாதெனில் : இதுவரை நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில் எந்த ஒரு அணியும் 200 ரன்களுக்கு கீழ் இலக்கினை நிர்ணயித்து வெற்றி பெறவில்லை.
இதையும் படிங்க : பவர்பிளே ஓவரில் நாங்கள் இப்படி நடந்தா என்ன பண்ண முடியும்? தோல்விக்கு பிறகு – அஜின்க்யா ரஹானே வருத்தம்
இவ்வேளையில் இந்த ஆண்டு முதல் முறையாக 200 ரன்களுக்கு குறைவாக அடித்தும் எதிரணியை தடுத்து நிறுத்தி சென்னை அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்மூலம் சிஎஸ்கே அணியின் கோட்டை சேப்பாக்கம் என்பது நிரூபணம் ஆகியது. அதோடு இந்த தொடரில் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



