பவர்பிளே ஓவரில் நாங்கள் இப்படி நடந்தா என்ன பண்ண முடியும்? தோல்விக்கு பிறகு – அஜின்க்யா ரஹானே வருத்தம்

Ajinkya Rahane
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியில் விளையாடியிருந்த ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை ருசித்தது. அதே வேளையில் சிஎஸ்கே அணியிடம் தோற்ற கொல்கத்தா அணி நான்காவது தோல்வியை பெற்று புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்திற்கு சென்றது.

சி.எஸ்.கே அணிக்கெதிரான தோல்விக்கு பின் : ரஹானே பேச்சு

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவிக்க பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியால் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.

- Advertisement -

இதன் காரணமாக 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே கூறுகையில் : இந்த போட்டியின் போது பந்துவீச்சில் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டோம். ஏனெனில் சென்னை அணியை 190 ரன்களில் இந்த மைதானத்தில் நிறுத்தியது மிகவும் சிறப்பான ஒன்று.

பவர்பிளே ஓவர்களில் அவர்கள் கிட்டத்தட்ட 70 ரன்கள் அடித்தும் அதிலிருந்து அவர்களை தடுத்து 190 ரன்களில் நிறுத்தியது என்பது பந்துவீச்சாளர்களின் மிகச் சிறப்பான செயல்பாடாக பார்க்கிறேன். ஆனால் நாங்கள் இந்த போட்டியை கோட்டை விட்டது பேட்டிங்கில் தான். ஏனெனில் பவர்பிளே ஓவர்களில் வெறும் 36-37 ரன்கள் அடித்தால் அதன் பின்னர் எப்படி போட்டிக்குள் வர முடியும். டி20 போட்டிகளில் பவர்பிளே ஓவர்களில் அதிக ரன்கள் குவிப்பது மிகவும் முக்கியம்.

- Advertisement -

இதையும் படிங்க : இப்போ தான் மெல்ல மெல்ல செட்டாகி வருது.. எல்லாரும் புரிஞ்சிகிட்டாங்க – ருதுராஜ் கெய்க்வாட் மகிழ்ச்சி

மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை எதிர்த்து அடிப்பது என்பது சவாலான விடயம். அதன் காரணமாகவே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் விழுந்தன. இந்த போட்டியில் ஏதாவது ஒரு பேட்ஸ்மேன் இறுதிவரை நின்று விளையாடி இருந்தால் நிச்சயம் வெற்றியை நோக்கி சென்றிருக்கலாம். அடுத்த போட்டியில் நாங்கள் அணியின் காம்பினேஷனில் சில மாற்றங்களை செய்யவும் இருக்கிறோம் என அஜின்க்யா ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement