சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 3-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான ஏழாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதன்படி விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி பஞ்சாப் அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை குவித்தது.
சி.எஸ்.கே அணியை வீழ்த்த இதுவே காரணம் : ஷ்ரேயாஸ் ஐயர்
பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியும் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.4 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 210 எண்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அதேவேளையில் சென்னை அணி இரண்டாவது தோல்வியை சந்தித்திருந்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : உண்மையிலேயே சேசிங்கின் போது நாங்கள் களமிறங்குகையில் சற்று கவலை இருந்தது. ஆனால் இந்த போட்டியில் எங்களுக்கு மிகச் சிறப்பான துவக்கம் கிடைத்தது. பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் மிகச் சிறப்பாக தங்களது வேலையை செய்து நல்ல ஒரு துவக்கத்தை அளித்தனர்.
அவர்கள் கொடுத்த அதிரடியான துவக்கம் வெளியில் இருந்த எங்களுக்கு நல்ல ஒரு பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது. உண்மையிலேயே அவர்கள் இருவரும் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தனர். அதேபோன்று இந்த முதல் இரண்டு போட்டிகளிலும் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவருமே ரன் குவித்து வருவது எங்களது அணிக்கும் ஒரு நல்ல நம்பிக்கையை தந்துள்ளது.
இதையும் படிங்க : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான இந்த மோசமான தோல்விக்கு காரணம் இதுதான் – ருதுராஜ் வருத்தம்
இனிவரும் போட்டிகளிலும் நாங்கள் இதேபோன்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். எங்களது அணியின் ஓய்வறையிலும் விவாதத்தின் போது நாங்கள் இதுபோன்ற ஒரு அதிரடியான ஆட்டத்தை விளையாடவே முடிவு செய்து விளையாடி வருகிறோம் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.



