7 கிலோ எடை இழப்பு.. அதை சரி பண்ண போதும் போதும்னு ஆயிடுச்சு.. காயம் குறித்து – ஷ்ரேயாஸ் ஐயர் பேச்சு

Shreyas Iyer
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் கடைசியாக ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியிருந்த போது தனது விலா எலும்பு பகுதியில் காயம் அடைந்தார். அந்த ஒருநாள் தொடருக்கு பின்னர் இந்திய அணியிலிருந்து வெளியேறிய அவர் தொடர்ந்து தனது காயத்திற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

7 கிலோ எடையை காயத்தால் இழந்தேன் : ஷ்ரேயாஸ் ஐயர்

இதனால் மூன்று மாதங்களாக அவர் எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடரானது மார்ச் 28-ம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கும் வேளையில் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமிற்கு வந்துள்ள கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தான் அடைந்த காயம் குறித்தும் அதிலிருந்து மீண்டது குறித்தும் பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : நான் ஆஸ்திரேலிய தொடரின் போது எதிர்பாராத விதமாக விலா எலும்பு பகுதியில் காயமடைந்தேன். அதன் காரணமாக சிகிச்சையை மேற்கொண்டு தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளேன்.

இந்த காயத்திலிருந்து மீண்டு வந்து களமிறங்குவது சாதாரண விடயம் கிடையாது. எப்போதுமே காயத்திலிருந்து மீண்டு வரும்போது அது ஒரு சவாலான விடயமாக இருக்கும். நான் இந்த மூன்று மாதங்களில் இந்த காயம் காரணமாக 7 கிலோ எடையை இழந்திருக்கிறேன். நல்ல வேளையாக இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்போது நல்ல உடற்தகுதியை எட்டி இருக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : நாதன் எல்லிஸ்ஸை தொடர்ந்து மேலும் ஒரு சி.எஸ்.கே வீரர் காயத்தால் விலகல் – விவரம் இதோ

இருந்தாலும் நான் இழந்த ஏழு கிலோவை மீண்டும் எட்டுவதற்கு பெரிய முயற்சி தேவைப்பட்டது. இந்த தொடரில் நிச்சயம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்துவேன் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement