நாதன் எல்லிஸ்ஸை தொடர்ந்து மேலும் ஒரு சி.எஸ்.கே வீரர் காயத்தால் விலகல் – விவரம் இதோ

CSK
- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பத்தாவது இடத்தை பிடித்து வெளியேறியது. இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெற உள்ள 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் வலுவான கம்பேக் கொடுக்கும் நோக்கத்தோடு தற்போது தங்களது அணியின் வீரர்களை ஒன்றிணைத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.

மேலும் ஒரு சி.எஸ்.கே வீரருக்கு ஏற்பட்டுள்ள காயம் :

இந்த 19-ஆவது ஐ.பி.எல் தொடரானது மார்ச் 28-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பல்வேறு அணிகளை சேர்ந்த பல வீரர்கள் காயம் காரணமாகவும், தனிப்பட்ட காரணங்களாலும் இந்த தொடரில் இருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான நாதன் எல்லிஸ் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் மற்றொரு நட்சத்திர ஆல்ரவுண்டரான மேத்யூ ஷார்ட் இந்த தொடரின் முதல்பாதி ஆட்டங்களில் சென்னை அணிக்காக விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் வெளியான அறிவிப்பின்படி : மேத்யூ ஷார்ட் தற்போது காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நாதன் எல்லிஸ் காயமடைந்த வேளையில் தற்போது மேத்யூ ஷார்ட் காயம் அடைந்துள்ளது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : அந்த ஐ.பி.எல் டீம்ல 2 ரசல் இருக்காங்க.. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க – டூபிளெஸ்ஸிஸ் எச்சரிக்கை

இந்த 2026 ஐ.பி.எல் தொடரானது சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மஹேந்திர சிங் தோனிக்கு கடைசி சீசனாக பார்க்கப்படுவதால் இம்முறை கோப்பையை வென்று அவரை வழியனுப்பும் நோக்கத்தோடு இந்த தொடரில் சி.எஸ்.கே அணி பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement